27 தியேட்டர்தான் கொடுத்தாங்க.. தமிழ் சினிமா சாகும்.. கொதித்து பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

Producer Suresh Kamatchi: தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவரது தயாரிப்பில் தமிழ் சினிமாவில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் தனது தயாரிப்பில் உருவான படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

27 தியேட்டர்தான் கொடுத்தாங்க.. தமிழ் சினிமா சாகும்.. கொதித்து பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

சுரேஷ் காமாட்சி

Updated On: 

02 Jan 2026 12:18 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நாகராஜா சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ. என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர் வி ஹவுஸ் புரடெக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவரது தயாரிப்பில் இதுவரை தமிழ் சினிமாவில் கங்காரு, மிக மிக அவசரம், மாநாடு, ஜீவி 2, ராஜாகிளி, வணங்கான் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதில் மாநாடு மற்றும் வணங்கான் ஆகியப் படங்கள் ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வி கிரியேஷன்ஸ் புரடெக்‌ஷன் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் சல்லியர்கள். இந்தப் படத்தை இயக்குநர் கிட்டு எழுதி இயக்கி இருந்த நிலையில் ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்தப் படம் கடந்த 1-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காதது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட பதிவு சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெறும் 27 திரையரங்குகளை வைத்துக்கொண்டு படத்தை எப்படி வெளியிடுவது?

அந்தப் பதிவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியதாவது, தமது தயாரிப்பில் உருவான சல்லியர் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதாக தேதி அறிவித்த பிறகு தமிழகத்தில் மொத்தமாகவே 27 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார். மேலும் ஒரு படம் ஓடுமா ஓடாதா என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்கிறீகள் என்று திரையரங்க உரிமையாளர்களை கேள்வியும் எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அந்த பதிவில் நாங்கள் எடுத்திருப்பது தமிழ் மக்கள் சார்ந்து ஈழப் போராட்டம் சார்ந்து எடுத்துள்ள தமிழ் மக்களுக்கான படம். எம் மக்களுக்கான படத்தை இங்கே வெளியிட இவ்வளவு போராட்டமாக உள்ளது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

Also Read… என்னங்க நடக்குது பிக்பாஸ் வீட்டில்… மீண்டும் இணைந்த கம்ருதின் பார்வதி – கடுப்பாகும் சாண்ட்ரா

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கௌதம் கார்த்திக் ரூட் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்

Related Stories
அரசன் படத்தில் சிலம்பரன் இத்தனை தோற்றங்களில் இருப்பாரா? வைரலாகும் தகவல்
பிக்பாஸில் பார்வதி – கம்ருதினால் எரிச்சலான போட்டியாளர்கள்… தகாத வார்த்தைகளால் சண்டை!
D 54 படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகளை தொடங்கிய படக்குழு – வைரலாகும் போட்டோ!
டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் சாண்ட்ராவை கடுப்பேத்தும் கம்ருதின் மற்றும் பார்வதி – வைரலாகும் வீடியோ
சீரியல் ஆக்டர் டூ கோலிவுட் நாயகன்… இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரிகிறதா? இவர் 3 ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார்!
New Year: ஃபர்ஸ்ட் பார்ட் சூப்பர் ஹிட்.. 2026 கோடைக்காலத்தில் ரிலீசிற்கு காத்திருக்கும் பார்ட் 2 படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ!
பான் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கடைசி நாள்.. யாருக்கு இது கட்டாயமில்லை?
துரந்தர் 2 இன்னும் பயங்கரமாக இருக்கும்.... - ராம் கோபால் வர்மா சர்ப்ரைஸ் தகவல்
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பில் சந்தேகம் - உத்தப்பாவின் பேச்சால் சர்ச்சை
தோனியின் காரில் இருந்த சிகரெட் பாக்ஸ் - வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி