Naga Vamsi: சூர்யா 46 படத்தின் நிலை என்ன? தயாரிப்பாளர் நாக வம்சி கொடுத்த அப்டேட்!

Suriya46 Update: தமிழில் முன்னணி நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. அந்த வகையில் தெலுங்கில் இவரின் நடிப்பில் உருவாகிவரும் படம்தான் சூர்யா46. இந்த படத்தின் ஷூட்டிங் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி தயாரிப்பாளர் நாக வம்சி அப்டேட் கொடுத்துள்ளார்.

Naga Vamsi: சூர்யா 46 படத்தின் நிலை என்ன? தயாரிப்பாளர் நாக வம்சி கொடுத்த அப்டேட்!

வெங்கி அட்லூரி, சூர்யா மற்றும் நாக வம்சி

Published: 

28 Oct 2025 16:42 PM

 IST

நடிகர் சூர்யா (Suriya) மற்றும் பிரபல இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் சூர்யா46 (Suriya46) இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் கடந்த 2025 மே மாதத்தில் தொடங்கியிருந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா முன்னணி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துவருகிறார். இவர் கதாநாயகியாக நடிக்கும் முதல் பிரம்மாண்ட படம்தான் இந்த சூர்யா46.  இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டேர்டைமென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் நாக வம்சி (Naga Vamsi) தயாரித்துவருகிறார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash kumar) இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் , சூர்யா46 படத்தின் நிலை என்ன என்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், இந்த சூர்யா46 படத்தின் ஷூட்டிங் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ப்ரோ கோட் பெயரைப் பயன்படுத்த ரவி மோகனுக்கு தடை – டெல்லி உயர் நீதிமன்றம்

சூர்யா46 படத்தை பற்றி அப்டேட் கொடுத்த நாக வம்சி :

அந்த நேர்காணலில் தயாரிப்பாளர் நாக வம்சி, “சூர்யாவின் சூர்யா46 படத்தின் ஷூட்டிங் 50 சதவீதம் நிறைவைத்துள்ளது. மேலும் இப்படத்திற்கு பான் இந்தியா என்ற டேக்கள் தேவையில்லை. இந்த படமானது ஒரு திடமான ஆல்பம், வலுவான உணர்ச்சிகள் மற்றும் குடும்ப இணைப்பு போன்ற கலவையான திரைப்படமாக உருவாகிவருவதாக” அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சூர்யா46 படத்தின் டைட்டில் குறித்த ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

சூர்யா46 திரைப்படம் குறித்து இறுதியாக வெளியான பதிவு :

இந்த சூர்யா46 படத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் என பல்வேறு பிரபலங்கள் இணையானது நடித்துவருகிறார். இந்நிலையில் இவர்களுடன் கே.ஜி.எஃப் பட புகழ் நடிகை ரவீனா டாண்டன் இணையானது நடித்தும் வருகிறார். இந்த படத்தில் இவர் நெகடிவ் வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வாய் பேச முடியாத ரசிகரின் வேண்டுகோள்.. சிரித்தபடி செய்துகொடுத்த அஜித்.. வைரல் வீடியோ

இந்த படமானது முழுக்க குடும்ப எமோஷனல் கதைக்களத்துடன் மிக பிரம்மாண்டமாக உருவாகிவருவதாக கூறப்படுகிறது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடுவதற்காக படக்குழு திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது. மிக விரைவில் இந்த படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவருகிறனர்.

Related Stories
யாரும் எதிர்பார்க்காத காம்போ.. சியான்63 படத்தில் விக்ரமிற்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. யார் தெரியுமா?
With Love Movie: முதல் காதலை தேடி பயணம்.. அபிஷன் ஜீவிந்தின் ‘வித் லவ்’ படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!
என்னைக்கும் விடாமுயற்சி…1- வருடத்தை கடந்த அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!
Atharvaa: நான் பட இயக்குநருடன் கைகோர்த்த அதர்வா.. வெளியானது புது படத்தின் டைட்டில் டீசர்!
WIth Love Movie: ‘வித் லவ்’ பட ரிலீஸ்.. திரையரங்கில் அலைமோதும் ரசிகர்கள் கூட்டம் – வைரலாகும் வீடியோ!
Sasikumar: எனது படங்கள் எல்லாம் புதுமுக இயக்குநர்களோட.. தோல்வியடைந்த இயக்குநர்களுடன்தான் – சசிகுமார் பேச்சு!
சிரஞ்சீவி - மோகன்லாலின் மெகா கூட்டணி இணையும் படம் - வெளியான அப்டேட்
அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரனின் ஏகே 64 - தயாரிப்பாளர் இவரா?
இரு விமானங்களில் இறக்கைகள் உரசியதால் பரபரப்பு
4 கி.மீ கடலில் நீந்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன்