இயக்குநர் சங்கரின் படத்தை தயாரித்தது தவறான முடிவு – தயாரிப்பாளர் தில் ராஜூ ஓபன் டாக்

Producer Dil Raju: இயக்குநர் சங்கர் குறித்து முன்னதாக கேம் சேஞ்சர் படத்தின் எடிட்டர் பேசியது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு இயக்குநர் சங்கர் உடன் பணியாற்றியது தவறான முடிவு என்று பேசியது வைரலாகி வருகின்றது.

இயக்குநர் சங்கரின் படத்தை தயாரித்தது தவறான முடிவு - தயாரிப்பாளர் தில் ராஜூ ஓபன் டாக்

இயக்குநர் சங்கர் மற்றும் தில் ராஜூ

Published: 

24 Jun 2025 13:33 PM

இயக்குநர் சங்கர் (Director Shankar) இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கேம் சேஞ்சர். நடிகர் ராம் சரண் நாயகனாக நடித்த இந்தப் படம் படு தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் எடிட்டர் சங்கர் உடன் பணிபுரிந்தது மோசமான அனுபவம் என்று தெரிவித்து இருந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ (Producer Dil Raju) சங்கர் உடன் பணிபுரிய எடுத்த முடிவு அவரது சினிமா வாழ்க்கையில் தவறான முடிவு என்று தெரிவித்துள்ளது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இயக்குநர் சங்கருக்கு இறுதியாக அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது.

இயக்குநர் சங்கர் உடனான கூட்டணி குறித்து தில் ராஜு பேசியது:

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தில் ராஜூ கேம் சேஞ்சர் படத்திற்காக இயக்குநர் சங்கர் உடன் கூட்டணி வைத்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, பெரிய இயக்குநர்களுன் பெரிய பட்ஜெட்டில் படங்களை செய்யும் போது நிச்சயமாக பிரச்னைகள் வரும். அது எனக்கு மட்டும் அல்ல அனைவருக்கும்தான்.

முன்னதாக படத்தின் எடிட்டர் ஷமீர் முகமது இயக்குநர் சங்கர் மீது குற்றச்சாட்டை வைத்து இருந்தார். அதில் படத்தின் மொத்த நேரம் 7 மணி நேரத்திற்கு மேலாக இயக்குநர் சங்கர் கொடுத்ததாகவும் அதனை 3.30 நிமிடங்களாக எடிட் செய்து கொடுக்க மிகவும் சிரமம் அடைந்ததாகவும் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் தில் ராஜு எடிட்டர் ஷமீர் முகதுவின் குற்றச்சட்டை ஒப்புக்கொண்டார். மேலும் இது போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களில் பணியாற்றும்போது இப்படியான குறுக்கீடுகளும் இருக்கும் என்றும் வெளிப்படையாக தயாரிப்பாளர் தில் ராஜூ பேசியிருந்தார். இந்த நிலையில் இது தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

மேலும் நடிகர் ராம் சரணுக்கு ஆர்ஆர்ஆர் மாதிரியான ஒரு ஹிட் படத்திற்கு பிறகு கேம் சேஞ்சர் தோல்வி கொடுத்தது மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்து இருந்தார். இது ராம் சரணின் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

இணையத்தில் கவனம் பெறும் தயாரிப்பாளர் தில் ராஜூ பேச்சு: