நம்மளுக்கு புடிச்ச விசயம் கிடைக்கனும்னா எவ்வளவு தூரம் வேணும்னாலும் போலாம் – வெளியானது நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் மேட் இன் கொரியா பட ட்ரெய்லர்

Made in Korea Movie Official Trailer Out Now : நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் மேட் இன் கொரியா. நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

நம்மளுக்கு புடிச்ச விசயம் கிடைக்கனும்னா எவ்வளவு தூரம் வேணும்னாலும் போலாம் - வெளியானது நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் மேட் இன் கொரியா பட ட்ரெய்லர்

மேட் இன் கொரியா

Published: 

04 Mar 2026 19:29 PM

 IST

கன்னட சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஓந்த் கதே ஹெல்லா என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை பிரியங்கா மோகன். இவர் கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் இவர் அதிக அளவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலேயே அதிக அளவில் படங்களில் நடித்துள்ளார். அதன்படி நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான டாக்டர் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கி இருந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக அறிமுகமான முதல் படமே தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர்கள் சூர்யா, தனுஷ் மற்றும் ரவி மோகன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் இதுவரை விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெளியானது பிரியங்கா மோகன் நடிப்பில் மேட் இன் கொரியா பட ட்ரெய்லர்:

இந்த நிலையில் நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ளப் படம் மேட் இன் கொரியா. இந்தப் படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த நிலையி இந்த இந்த மேட் இன் கொரியா படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படத்தை இயக்குநர் ரா கார்த்திக் எழுதி இயக்கி உள்ளார். இவர் முன்னதாக தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நித்தம் ஒரு வானம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மேட் இன் கொரியா படமும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… ராம் சரணின் ராய் ராய் ரா ரா பாடலைப் பாராட்டிய சிரஞ்சீவி – வைரலாகும் போஸ்ட்!

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகர் யாஷின் டாக்ஸிக் படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தது படக்குழு – என்ன காரணம்?

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ