Priyanka Mohan: மறைந்த அந்த நடிகையின் பயோபிக்கில் நடிக்க ஆசை – பிரியங்கா மோகன் ஓபன் டாக்!

Priyanka Mohan Dream Biopic: தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்துவருபவர் பிரியங்கா மோகன். இவர் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த நிலையில், அதில் பிரபல நடிகை ஒருவரின் பயோபிக்கில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். அது யார் என விவரமாக பார்க்கலாம்.

Priyanka Mohan: மறைந்த அந்த நடிகையின் பயோபிக்கில் நடிக்க ஆசை - பிரியங்கா மோகன் ஓபன் டாக்!

பிரியங்கா மோகன்

Updated On: 

28 Feb 2026 16:33 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் லீட் கதாநாயகியாக படங்களில் நடித்துவருபவர் நடிகை பிரியங்கா மோகன் (Priyanka Mohan). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் பிரதர் (Brother). கடந்த 2024ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் ரவி மோகனுக்கு (Ravi Mohan)ஜோடியாக நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதன் பிறகு 1 ஆண்டுக்கும் மேலாக இவரின் நடிப்பில் தமிழில் எந்த படங்களும் வெளியாகவில்லை. இந்நிலையில் இவர் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பின் கீழ் “மேட் இன் கொரியா” (Made In Korea) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படமானது நேரடியாக ஓடிடி ரிலீஸிற்காக தயாரிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் 2026 மார்ச் 12ம் தேதியில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரியங்கா மோகன், மறைந்த பிரபல 90ஸ் நடிகையின் பயோ பைக்கில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளர். அந்த நடிகை வேறுயாருமில்லை நடிகை சௌந்தர்யா (Soundarya) தான்.

இதையும் படிங்க: டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

மறைந்த 90ஸ் நடிகையின் பயோபிக்கில் நடிக்க விரும்பும் பிரியங்கா மோகன்:

அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரியங்கா மோகனிடம் தொகுப்பாளர், “நீங்கள் எந்த நடிகையின் பயோபிக்கில் நடிக்க விரும்புகிறீர்கள்?” என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு உடனே பதிலளித்த பிரியங்கா மோகன், “நான், நடிகை சௌந்தர்யா மேமின் பயோபிக்கில் நடிக்க விரும்புகிறேன். அவரை உங்களுக்கும் தெரியும் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

நடிகை பிரியங்கா மோகனின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

நடிகை அந்த நிகழ்ச்சியின்போது சொன்ன நடிகை, படையப்பா திரைப்படத்தில் ரஜினிகாந்தின் ஜோடியாக நடித்த மறைந்த நடிகை சௌந்தர்யாதான். இவர் கடந்த 90ஸ் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துவந்தவர். இவரின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதற்கு விரும்புவதாகதான் நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘இனிமேலாவது வட சென்னை 2 பற்றி அப்டேட் கேக்காதீங்க’ – தனுஷ் பேச்சு!

பிரியங்கா மோகனின் நடிப்பில் மேட் இன் கொரியா படமானது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. மேலும் இவர் தமிழில் கவினுக்கு ஜோடியாகவும் புது திரைப்படத்தில் நடித்துவருகிற. இதில் முக்கிய வேடத்தில் நடனக்கலைஞர் சாண்டியும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை அறிமுக இயக்குநர் கென் ராய் இயக்கிவரும் நிலையில், இந்த 2026ம் ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
குதிரை மேல் வந்து டெலிவரி செய்த ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. இணையத்தில் வைரல் காட்சிகள்..
நான்கு நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
11 மாத குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ஒன்றிணைந்த மக்கள்
செயல்படாத EPF கணக்குகள்.. தொழிலாளர் அமைச்சகம் முக்கிய முடிவு..