Pradeep Ranganathan: மீண்டும் இளம் இயக்குநருடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்.. அடுத்த படம் யாருடன் தெரியுமா?
Pradeep Ranganathan New Movie: தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைந்து தற்போது கதாநாயகனாக கலக்கிவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தொடர்ந்து இளம் இயக்குநர்களுடன் படங்களில் பணியாற்றிவந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு இளம் இயக்குநருடன் புது படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வைரலாகிவருகிறது. அது யார் என பார்க்கலாம்.

பிரதீப் ரங்கநாதன்
கோமாளி (Comali) என்ற படத்தை இயக்கியதன் மூலமாக தமிழில் இயக்குநராக நுளைந்தவர் பிரதீப் ரங்ககநாதன் (Pradeep Ranganathan). இந்த படம் மூலம் இயக்குநராக வரவேற்பைப் பெற்ற இவர், அதில் கேமியோ வேடத்திலும் நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு வெற்றியை கொடுக்க தனது 2வது படத்தை இயக்கி அதிலே கதாநாயகனாகவும் அறிமுகமானார். அந்த படத்தை அடுத்ததாக அடுத்தடுத்த இளம் இயக்குநர்களுடனும் புது படங்களில் இவர் நடித்துவந்தார். இவரின் நடிப்பில் மட்டும் கடந்த 2025ம் ஆண்டில் இரு படங்கள் வெளியாகியிருந்தது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimutha) இயக்கத்தில் வெளியான டிராகன் (Dragon) மற்றும் இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthishwaran) இயக்கத்தில் வெளியான டியூட் (Dude) போன்ற இரு படங்கள் கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. மேலும் தொடர்ந்து இவர் தற்போது இளம் இயக்குநர்களின் படங்களிலே ஹீரோவாக நடித்துவருகிறார்.
இறுதியாக கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு இளம் இயக்குநரின் படத்தில் இணையவுள்ளாராம். அது வேறுயாருமில்லை, நடிகர் சமுத்திரக்கனி நடித்திருந்த ரைட்டர் படத்தை இயக்கியிருந்த பிராங்க்ளின் ஜேக்கப் தான். இது குறித்து இன்னும் எந்த அறிவிப்புகளும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எனக்கு அதன் மீது எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை – ஓபனாக பேசிய விஜய் சேதுபதி!
பிரதீப் ரங்ககநாதன் மற்றும் பிராங்க்ளின் ஜேக்கப் புது படம் குறித்து வைரலாகும் பதிவு :
#PradeepRanganathan as an actor said to have finalized his next movie with director #FranklinJacob who has made his Debut film through Samuthirakani’s #Writer movie🎬 (©️VP)
PradeepRanganathan’s pick up of Young Talented directors👌👏 pic.twitter.com/x29RLs00Oq
— AmuthaBharathi (@CinemaWithAB) January 23, 2026
இயக்குவதை தவிர்த்து மீண்டும் நாயகனாகவே நடிக்கப்போகிறாரா பிரதீப் ரங்ககநாதன் :
பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 4 படங்ககள் உருவாகியிருந்தாலும் அதில் 3 படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. இன்னும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட வெளியாகவில்லை. இது வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காதலர் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். இந்நிலையில் தனது 5வது படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுவந்தது.
இதையும் படிங்க: ஆண்கள் அதற்கு மட்டும்தான்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை தபு!
இதற்கான கதை எழுதும் பணியில் அவர் தீவிரமாக இருப்பதாக கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது அந்த படத்தை அவர் தற்போது எடுக்கவில்லை என வட்டாரங்கள் கூறுகிறது. அதற்கு பதிலகத்தான் இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் புது படத்தில் ஒப்பந்தமாகவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படமானது முற்றிலும் ஒரு பொழுதுபோக்கிற்கான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.