Pradeep Ranganathan: தெலுங்கு இயக்குநருடன் புது படத்தில் கைகோர்த்த பிரதீப் ரங்கநாதன்? – வைரலாகும் தகவல்!
Pradeep Ranganathan New Movie: தென்னிந்திய சினிமாவில் தற்போது இளம் நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது புது படங்களில் நடிப்பதில் ஈடுபட்டுவரும் நிலையில், இவரை பிரபல தெலுங்கு இயக்குநர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

பிரதீப் ரங்கநாதன் மற்றும் சந்திர சேகர் யெலேட்டி
நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) தமிழ் சினிமாவில் சென்சேஷனல் நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இயக்குநராக சினிமாவில் நுழைந்த இவர், தற்போது நடிகராகவே தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை மொத்தம் 3 படங்கள் வெளியாகியுள்ளது. 4வது படமாக “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம்” (Love Insurance Kompany) வெளியாக காத்திருக்கிறது. இந்த படத்தய் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள நிலையில், பிரதீப் ரங்கநாதனுடன் எஸ்.ஜே.சூர்யா (SJ.Suryha), க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் இப்படத்தை அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன், தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் புது படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: வெறும் பாடகி மட்டுமில்ல.. இனி பிரபல நடிகையும் கூட.. சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ள ஜோனிடா காந்தி!
தெலுங்கு இயக்குநருடன் புது படத்தில் கைகோர்க்கும் பிரதீப் ரங்கநாதன்:
நடிகர் ப்ரதீப் ரங்கநாதன் தொடர்ந்து தமிழ் இயக்குநர்களின் இயக்கத்தில் படங்களில் இணைந்து நடித்துவருகிறார். அந்த விதத்தில் தற்போது இவர் தெலுங்கு இயக்குநரின் இயக்கத்தில் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த இயக்குநர் வேறுயாருமில்லை, மோகன்லாலின் மனமந்தா என்ற படத்தை இயக்கியிருந்த சந்திர சேகர் யெலெட்டிதான்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி நடிப்பில் ஓடிடியில் வெளியாகி உள்ள முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
இவர் பிரதீப் ரங்கநாதனுடன் புதிய படத்தில் இணைவதாக கூறப்படும் நிலையில், இப்படத்தை டியூட் பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறதாம். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
தெலுங்கு இயக்குநருடன் பிரதீப் ரங்கநாதன் இணையும் புது படம் குறித்த பதிவு:
– #PradeepRanganathan has locked his next immediate project with a director 🎬
– The film will be directed by Telugu filmmaker #ChandraSekharYeleti 🔥
– This movie is said to be an action thriller 💥
– It will be produced by Mythri Movie Makers 🏢Official Announcement Coming 🔜 pic.twitter.com/4pQOUaXnVj
— Movie Tamil (@_MovieTamil) March 29, 2026
நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனது இயக்கத்திலும், நடிப்பிலும் தனது 5வது படத்தய் உருவாக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதை ஏ.ஜி.எஸ். எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகளில் பிரதீப் இருப்பதாக கூறப்படும் நிலையில், இது குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லவ் இன்சூரன்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ரசிகர்களின் கவனம்முழுக்க அப்படத்தின் மீது திரும்பியுள்ளது. இப்படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியிடப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.