Pooja Hegde: அந்த பெரிய நட்சத்திர நடிகர் என்னை தொட முயன்றார்.. உடனடியாக அவரை அறைந்தேன்- பூஜா ஹெக்டே பரபரப்பு பேட்டி!

Pooja Hegdes Shocking Interview: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக இருந்துவருபவர் பூஜா ஹெக்டே. இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பரபரப்பான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். ஒரு பெரிய நடிகருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த மோசமான சம்பவம் குறித்து அவர் அதில் பகிர்ந்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகர் யார் என கேள்வியை எழுப்பியுள்ளது.

Pooja Hegde: அந்த பெரிய நட்சத்திர நடிகர் என்னை தொட முயன்றார்.. உடனடியாக அவரை அறைந்தேன்- பூஜா ஹெக்டே பரபரப்பு பேட்டி!

பூஜா ஹெக்டே

Published: 

19 Jan 2026 11:50 AM

 IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்து பிரபலமாகிவருபவர் பூஜா ஹெக்டே (Pooja Hegde). இவரின் நடிப்பில் தமிழில் சில படங்களே வெளியாகியிருந்தாலும், அது எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவர் தமிழில் இறுதியாக தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) ஜன நாயகன் (Jana Nayagan) படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் “கயல்” என்ற வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது இன்னும் ரிலீஸ் செய்யப்படாத நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த படத்தை அடுத்ததாக தெலுங்கில் துல்கர் சல்மானுடன் (Dulquer Salmaan) புது படத்தில் இவர் நடித்துவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பூஜா ஹெக்டே ஒரு பெரிய நட்சத்திர நடிகரின் (Big star actor) படத்தின் ஷூட்டிங்கில் நடந்த மோசமான சம்பவம் குறித்து ஓபனாக தெரிவித்துள்ளார்.

அதில் ஷூட்டிங்கின்போது, பெரிய நட்சத்திர நடிகர் தன்னிடம் அத்துமீற முயன்றது மற்றும் அந்த நடிகரை அறைந்தது குறித்தும் பரபரப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். இது தற்போது அவரின் ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நடிகர் யார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: மீண்டும் பாலிவுட் பக்கம் திரும்பிய கீர்த்தி சுரேஷ்.. அட இந்த நடிகருக்கு ஜோடியாகவா?

உச்ச நடிகருடன் ஷூட்டிங்கில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து பூஜா ஹெக்டே பேச்சு :

அந்த பேட்டியில் பேசிய பூஜா ஹெக்டே, ” சில வருடங்களுக்கு முன்பு, ஒரு பெரிய நடிகருடன் பான் இந்திய படத்தில் பணியாற்றியிருந்தேன். அப்போது ஒரு ஸ்டார் நடிகர் அனுமதியின்றி எனது கேரவனில் நுழைந்து எல்லை மீறி என்னை தொட முயன்றார். நான் அந்த நடிகரை உடனே அறைந்தேன். அந்த சம்பவத்திற்கு பின் மீண்டும் இந்தத் படத்திலும் அவர் என்னுடன் பணியாற்றவில்லை. நடிகைகள் சினிமாதுறையில் இதுபோன்ற மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறோம்” என அவரை அதில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு :

நடிகை பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் தற்போது உச்ச இருந்துவருகிறார். நயன்தாரா, திரிஷாவை அடுத்ததாக இவர் உச்ச நடிகர்களின் படங்களில் அவளுக்கு ஜோடியாக இணைந்து நடித்துவருகிறார். அந்த விதத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தெலுங்கில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக DQ41 என்ற படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியின் டைட்டிலை தட்டிச்சென்ற திவ்யா கணேஷ்.. ஹேப்பியில் ரசிகர்கள்!

மேலும் இந்தி மொழியிலும் புது படத்தில் இவர் நடித்துவருகிறார். இவ்வாறு பான் இந்திய மக்களிடையே பிரபலமான நடிகைகளில் ஒருவராக இவர் இருக்கிறார். தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் படத்திலும் இவர் பணியாற்றியுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
ஆதார் அட்டைதாரர்களே.. இந்தத் தவறுகள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்.. அரசு எச்சரிக்கை!!
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!
"பாட்டி.. மொத்த சமோசாவும் காலி".. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!
‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..