நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த பூஜா ஹெக்டே!
Actress Pooja Hegde: தென்னிந்திய சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தற்போது நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை பூஜா ஹேக்டே வெளியிட்ட செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜயுடன் பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே (Actress Pooja Hegde) தற்போது நடிகர் விஜயின் (Actor Vijay) இறுதிப் படமான ஜன நாயகன் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படம் குறித்தும் படத்தில் நடிப்பது குறித்தும் நடிகை பூஜா ஹெக்டே முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியது ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இந்த நிலையில் இன்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில் ஒரு பதிவை எழுதியுள்ளார். அந்தப் பதிவில் நடிகை பூஜா ஹெக்டே இன்று ஜன நாயகன் படத்தில் தனக்கு கடைசி நாள் என்றும் இன்றுடன் ஜன நாயகன் படத்தில் தனக்கான பகுதி நிறைவடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவி தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. முன்னதாக நடிகர் விஜயின் பகுதி முடிவடைந்த செய்தி இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
விஜயின் நடிப்பில் இறுதியாக வெளியாகும் ஜன நாயகன்:
தீவிர அரசியலில் களம் இறங்க உள்ள நிலையில் நடிகர் விஜய் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவிப்பை வெளியிட்டார். அது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு வருத்தம் தெரிவித்து பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டனர். அதே நேரத்தில் விஜயின் இறுதிப் படம் குறித்த அப்டேட்டையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். மேலும் விஜயின் இறுதிப் படத்தில் நாயகியாக யார் நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆனார். இவர் முன்னதாக விஜயின் நாயகியாக பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பதிவு:
இந்த நிலையில் முன்னதாக நடிகை பூஜா ஹெக்டே அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலானது. அதில் இரண்டாவது முறையாக நடிகர் விஜயின் நாயகியாக நடிப்பதில் மகிழ்ச்சி தெரிவித்த பூஜா ஹெக்டே அவரின் நடிப்பில் வெளியாகும் இறுதிப் படம் என்பது மனதிற்கு வருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
மேலும் படம் வருகின்ற ஜனவரி மாதம் 9-ம் தேதி 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு முன்பே அறிவிப்பை வெளியிட்டது. இதன் காரணமாக படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.