எனக்கு தமிழில் அந்தப் படங்கள் ரொம்ப பிடிக்கும்… நடிகை பூஜா ஹெக்டே

Actress Pooja Hegde: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் தமிழில் தனக்குப் பிடித்தப் படங்கள் குறித்து பேசியுள்ளார்.

எனக்கு தமிழில் அந்தப் படங்கள் ரொம்ப பிடிக்கும்... நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே

Published: 

13 Jun 2025 14:46 PM

 IST

நடிகை பூஜா ஹெக்டே (Actress Pooja Hegde) தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் அவர் அதிக அளவில் படங்கள் நடித்தது என்னமோ தெலுங்கு சினிமாவில் தான். இது மட்டும் இன்றி நடிகை பூஜா ஹெக்டே கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே முன்னதா ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகின்றது. அது என்ன என்றால் அந்த பேட்டியில் அவருக்குப் பிடித்த தமிழ்ப் படங்கள் குறித்து பேசியுள்ளார். இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே பேசியதாவது “எனக்கு ஆர்யாவின் அந்த பாக்ஸிங் படம் பிடிக்கும்… சார்பட்டா. ஆமா அந்த சார்ப்பாட்ட பரம்பரை படம் ரொம்ப பிடிக்கும்.

அந்தப் படம் ஓடிடி ரிலீஸ் ஆச்சுல. ஆனா அது தியேட்டர் ரிலீஸ் ஆகி இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும் அந்தப் படம் பிடிக்கும் எனக்கு. அப்பறம் எனக்கு விஜய் சேதுபதியின் மகாராஜா படம் பிடிக்கும். எனக்கு தமிழ் சினிமாவில் இந்தப் இரண்டு படங்களையும் பிடிக்கும்” என்று நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்தது தற்போது ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.

நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பதிவு:

ரெட்ரோ படத்தில் கலக்கிய பூஜா ஹெக்டே:

கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு நடிகர்கள் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவின் நடிப்பில் ரெட்ரோ படம் வெளியானது. இதில் நடிகர் சூர்யாவின் பாந்தமான காதலியாக நடிகை பூஜா ஹெக்டே கலக்கி இருப்பார். இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டேவின் கதாப்பாத்திரத்தின் பெயர் ருக்மணி. இந்தப் படத்திற்கு பிறகு நடிகை பூஜா ஹெக்டேவை ருக்கு என்றே ரசிகர்கள் அன்புடன் அழைக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் நடிகை பூஜா ஹெக்டேவின் அமைதியான நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு பிறகு நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் ரசிகர்கள் அதிகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகனில் விஜய்க்கு நாயகியான நடிகை பூஜா ஹெக்டே:

நடிகர் விஜயின் 69-வது படமான ஜன நாயகனில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். விஜயின் இறுதிப் படமான இதில் நடிப்பது குறித்து நடிகை பூஜா ஹெக்டே முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய போது இந்தப் படத்தில் நடிப்பது மிகவும் பெருமையாக இருக்கு ஆனால் அதே நேரத்தில் அவர் இனி படங்களில் நடிக்க மாட்டார் என்பது மிகவும் வருத்தமாக உள்ளது என்றும் அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories
2025ல் டிரென்டிங்.. இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படத்தின் ட்ரெய்லர் எது தெரியுமா? முழு விவரங்கள் இதோ!
Jana Nayagan: லியோவை முந்திய ஜன நாயகன்.. டிக்கெட் முன்பதிவில் சாதனை.. வைரலாகும் பதிவு!
Suriya47: சிங்கம் இஸ் பேக்.. போலீஸ் அதிகாரி வேடத்தில் சூர்யா. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
DC Movie: லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ பட முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.. புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன்!
Kombuseevi: சரத்குமார் – சண்முக பாண்டியனின் அதிரடி கதையில்… கொம்புசீவி படம் எப்படி இருக்கு.. விமர்சனங்கள் இதோ!
கூட்டத்தில் பிரபல நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்கள்… விசாரணையில் இறங்கிய போலீஸ்!
பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கும் சாய் பல்லவி?
ஜிம்மில் பயிற்சி செய்தபோது திடீரென பார்வை இழந்த 27 வயது இளைஞர்