ஆடியோ லாஞ்ச் தேதியை லாக் செய்தது பராசக்தி படக்குழு – வைரலாகும் பதிவு
Parasakthi Movie Audio Launch Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி உள்ள படம் பராசக்தி. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

பராசக்தி
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே தற்போது அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக உள்ளது பராசக்தி. பீரியட் ட்ராமாவாக உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி எதிர்ப்பு கொள்கையை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி உள்ளார். முன்னதாக இவரது இயக்கத்தில் தமிழில் வெளியான சூரரைப் போற்றுப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல இந்த பராசக்தி படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.
அதன்படி படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற ஜனவரி மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது இருக்கும் என்று ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
ஆடியோ லாஞ்ச் தேதியை லாக் செய்தது பராசக்தி படக்குழு:
இந்த நிலையில் பராசக்தி படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் படத்தில் இருந்து முன்னதாக 3 பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜனவரி மாதம் 3-ம் தேதி 2026-ம் ஆண்டு சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read… அனைவரும் எதிர்பார்த்த கூட்டணி.. கமல்ஹாசனுடன் இணைகிறாரா வெற்றிமாறன்?
பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Turn up the volume 🔊#Parasakthi – Audio launch on the 3rd of January. The year to begin with a celebration for us🧨🔥
📍Sairam Engineering College, Tambaram, Chennai.#ParasakthiAudioLaunch#ParasakthiFromPongal#ParasakthiFromJan10@siva_kartikeyan @Sudha_Kongara… pic.twitter.com/HG113Rszr1
— DawnPictures (@DawnPicturesOff) December 30, 2025