பாக்கியலட்சுமி – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இயக்குநரின் புதிய தொடர் டைட்டில் இதுவா? யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியும்?

Vijay TV New Serial: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் புகழ்பெற்ற சீரியல்களாக இருந்துவந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரு சீரியல்களை இயக்கியவர் டேவிட் ஜான். இவர் தற்போது புதிதாக தொடர் ஒன்றை இயக்கவுள்ளாராம். அதன் டைட்டில் மற்றும் நடிகர்கள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இயக்குநரின் புதிய தொடர் டைட்டில் இதுவா? யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியும்?

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி

Updated On: 

14 Mar 2026 18:12 PM

 IST

தமிழில் சினிமா ரசிகர்களை ஒப்பிடும்போது சீரியல்கள் ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் தொலைக்காட்சி தொடர்களில் கிட்டத்தட்ட 3 சேனல்கள் தான் முன்னிலை வகிக்கிறது. விஜய் தொலைக்காட்சி (Vijay TV), சன் தொலைக்காட்சி (Sun TV) மற்றும் ஜீ தமிழ் (zee Tamil) தொலைக்காட்சி. இவை மூன்றும் மக்கள் மத்தியில் சீரியல்களுக்காகவே பெயர்போனது. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என மக்களை தங்களின் பக்கம் ஈர்த்துவைத்திருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரதபலமான சீரியலாக இருந்துவந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் (Pandiyan Stores) மற்றும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) . இந்த இரு சீரியல்களை மக்களிடையே மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று. அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியானது சிறப்பாக ஒளிபரப்பப்பட்டுவருகிறது.

இந்த சீரியல் மக்களிடையே தற்போது வெகு சிறப்பான ஈர்ப்பையும் ஏற்படுத்திவருகிறது. இந்த சீரியலின் இயக்குநர் டேவிட் ஜான் (David John) தற்போது புது தொலைக்காட்சி தொடர் ஒன்றை இயக்கவுள்ளாராம். இந்த தொலைக்காட்சி தொடர் மற்றும் அதில் எந்தெந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

இதையும் படிங்க: கருப்பு படத்திற்கு பாடல் பாடிய சிலம்பரசன்? – சாய் அபயங்கர் வெளியிட்ட பதிவு வைரல்!

பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குநரின் புதிய தொடர்:

இந்த புதிய தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள், பிக் பாஸ் பிரபலம், சன் டிவி பிரபலங்கள் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த புது சீரியலுக்கு லட்சுமி ஸ்டோர்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். இந்த சீரியலில் நடிகர்கள் நிரோஷா, ஸ்டாலின், வசந்த் வசி, ரியா தியாகராஜன், வைஷ்ணவி, அஜித், சங்கரேஷ் குமார் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடிக்கவுள்ளார்களாம். இந்த் சீரியலின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இதனை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் பர்த்டே ஸ்பெஷல்… போஸ்டரை வெளியிட்ட டிசி படக்குழு!

இயக்குநர் டேவிட் ஜானின் புது தொலைக்காட்சி தொடர் குறித்த இன்ஸ்டாகிராம் பதிவு:

இந்த தொலைக்காட்சி தொடரானது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், இந்த சீரியலுக்கு முதலில் “வரவுகேத்த செலவு” என டைட்டில் வைக்கப்பட்டதாகவும், பின் தற்போது லட்சுமி மெஸ் என டைட்டில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு மெஸ் நடத்தும் குடும்பத்தின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது பற்றிய அறிவிப்புகளும் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us
மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்ட பெண் உயிரோடு வந்ததால் பரபரப்பு - பிலிபித்தில் நடந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் விளக்கம்”
எரிவாயு தட்டுப்பாடு.. சிறிய உணவகங்கள் மூடல், கருப்புச் சந்தையில் சிலிண்டர் ரூ.3000 வரை உயர்வு..
ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்ல இந்தியாவுக்கு அனுமதி.. வெளிய்றவுத்துறை அமைச்சர் சொன்ன விஷயம்..
ஈராக் அருகே எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு