OTT Movies: சைக்கோ கணவரிடம் மாட்டும் மனைவியின் திக் திக் நிமிடங்கள்.. இந்த படம் தெரியுமா?

2002-ல் வெளியான "Enough" திரைப்படம், ஜெனிஃபர் லோபஸ் நடித்த அதிரடி சைக்கோ த்ரில்லர் திரைப்படமாகும். கணவனின் வன்முறையிலிருந்து தப்பிக்கும் ஒரு பெண்ணின் போராட்டத்தைக் காட்டும் இந்தப் படம்,ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக சில குறைகள் இருந்தாலும், கதையின் திருப்பங்களும் ஜெனிஃபரின் நடிப்பும் படத்தைப் பார்க்கத் தூண்டும் காரணிகளாக அமைந்தது.

OTT Movies: சைக்கோ கணவரிடம் மாட்டும் மனைவியின் திக் திக் நிமிடங்கள்.. இந்த படம் தெரியுமா?

Enough படம்

Published: 

05 Jun 2025 09:30 AM

 IST

பொதுவாக உள்ளூர் சினிமா தொடங்கி உலக சினிமா வரை பல பிரிவுகளில் படங்கள் வெளி வருகிறது. காதல், நட்பு, பேண்டஸி, ஆக்‌ஷன், த்ரில்லர், விளையாட்டு, அரசியல் என அடுக்கிக் கொண்டே போகலாம். கற்பனைக்கும் எட்டாத விஷயங்களை கூட சினிமா மூலம் நம்மால் காண இயலும். இப்படியான பட்சத்தில் 2002 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான சைக்கோ த்ரில்லர் படமான Enough படம் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். இந்த படமானது நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் 1998 ஆம் ஆண்டு அதிகம் விற்பனையான நாவலான பிளாக் அண்ட் ப்ளூவை அடிப்படையாகக் கொண்டது. இந்த நாவலை அன்னா குயின்ட்லென் எழுதியிருந்தார். இப்படத்தை மைக்கேல் ஆப்டெட் இயக்கிய நிலையில் ரோஜியர் ஸ்டோஃபர்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார். Enough படத்தில் ஜெனிஃபர் லோபஸ் ஹீரோயினாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் பில்லி கேம்பல்,ஜூலியட் லூயிஸ்,டெஸ்ஸா ஆலன், ஜேனட் கரோல் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். 2 மணி நேரம் ஓடக்கூடிய இப்படம் அதிரடி திருப்பங்கள் நிறைந்தது.

படத்தின் கதை 


லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்படும் உணவகம் ஒன்றில் பணியாளராக ஜெனிபர் லோபஸ் பணியாற்றி வருகிறார். அவர் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பில்லி கேம்பலை சந்திக்கிறார். இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு டெஸ்ஸா ஆலன் என்ற மகள் இருக்கிறார். மகிழ்ச்சியாக வாழ்க்கையை கழித்து வரும் நிலையில் ஆறு வருடங்களுக்குப் பிறகு பில்லி கேம்பல் தன்னை ஏமாற்றி வருவதை ஜெனிபர் லோஃபஸ் கண்டுபிடிக்கிறார்.

இதனால் அவரை விட்டு பிரிவதாக மிரட்டும் போது பில்லி ஜெனிபரை சரமாரியாக தாக்குகிறான். மேலும் தான் குடும்பத்தில் அதிக வருமானம் ஈட்டும் நபர் என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்வேன், நீ என்னுடன் சண்டையிட மட்டுமே முடியும் தவிர, வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடியாது என பில்லி ஜெனிஃபருக்கு பதிலளிக்கிறான். இதனைத் தொடர்ந்து பில்லியின் தாயாரிடம் ஜெனிபர் முறையிடுகிறாள் ஆனால் அவள் மகனைக் கண்டிக்காமல் ஆறுதல் மட்டுமே தெரிவிக்கிறாள்.

இதனைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறி அவன் மீது வழக்கு தொடருமாறு ஜெனிபரின் தோழியான ஜூலியட் லூயிஸ் கூறுகிறார். தனது மகள் டெஸ்ஸா ஆலனுடன் வீட்டை விட்டு தப்பிக்க நினைக்கும் ஜெனிபர் லோபஸ் திட்டம் பில்லி கேம்பலால் முறியடிக்கப்படுகிறது. இதன் பின்னர் இறுதியாக என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதையாகும்.

எந்த ஓடிடியில் காணலாம்?

இந்த படமானது 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி வெளியாகி வசூலில் சாதனைப் படைத்தது. இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்தாலும் விமர்சன ரீதியாக தோல்விப்படமாகவே அமைந்தது. ஆனால் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. வாய்ப்பு இருப்பவர்கள் இந்த படத்தைப் பாருங்கள்.

Related Stories
Sirai Movie: மிகவும் உண்மையானதாகவும் அசலாகவும் உணர்ந்தேன்.. சிறை படத்திற்கு விமர்சனம் கொடுத்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து!
அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் ரீ-ரிலீஸாகும் மங்காத்தா.. வைரலாகும் பதிவு!
உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியான டொவினோ தாமஸின் நரிவேட்டை படம் – எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
2026ல் எதிர்பார்ப்புகளுடன் வெளியாக காத்திருக்கும் தமிழ் நடிகர்களின் படங்கள்?
2025-ம் ஆண்டில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த தென்னிந்திய மொழிப் படங்கள்
Radhika Apte: ஷூட்டிங் தளத்தில் நான் மட்டும்தான் பெண்.. என்னிடம் அதை செய்த சொன்னது மிகவும் அசௌகரியமாக இருந்தது- ராதிகா ஆப்தே ஓபன் டாக்!
ஏஐ காதலரை திருமணம் செய்துகொண்ட ஜப்பானிய பெண்
வருடத்திற்கு 6 முதல் 12 லட்சம் சம்பளம் வாங்குகிறீர்களா?
ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் தகுதிப்பெற்ற இந்தியத் திரைப்படம்!!
உலக அளவில் 100 சிறந்த இனிப்புகளில் இடம்பெற்ற 2 இந்திய இனிப்புகள் - எது தெரியுமா?