சர்வம் மாயா படத்தின் வெற்றி விழாவை கொண்டாடிய படக்குழு… புகைப்படங்களைப் பகிர்ந்த நிவின் பாலி!

Sarvam Maya Movie Success Meet Photos: மலையாள சினிமாவில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சர்வம் மாயா. இந்தப் படத்தின் வெற்றி விழா புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சர்வம் மாயா படத்தின் வெற்றி விழாவை கொண்டாடிய படக்குழு... புகைப்படங்களைப் பகிர்ந்த நிவின் பாலி!

நிவின் பாலி

Published: 

03 Mar 2026 17:56 PM

 IST

மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் நிவின் பாலி. இவர் கடந்த 2010-ம் ஆண்டு முதல் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ஐப் பெற்றது. மேலும் நடிகர் நிவின் பாலி தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி படங்களை தயாரிக்கவும் செய்து வருகிறார். இவரது நடிப்பில் முன்னதாக மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் படம் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் தொடர்ந்து நிவின் பாலி மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார். அதன்படி பிரேமம் படத்திற்கு பிறகு நிவின் பாலியின் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் உள்ள ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அதன்படி கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி மலையாள சினிமாவில் வெளியான படம் சர்வம் மாயா. ஃபேண்டசி காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் உலக அளவில் சுமார் ரூபாய் 150 கோடிகள் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைக் கொண்டாடும் விதமாக படக்குழு சமீபத்தில் விழா ஒன்றை நடத்தியது. இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகர் நிவின் பாலி.

சர்வம் மாயா படத்தின் வெற்றி விழாவை கொண்டாடிய படக்குழு:

அதன்படி இந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு மொமெண்டோ வழங்கப்பட்டது. மேலும் படத்தில் நடித்த நடிகர்களும் தங்களது அனுபவங்களை பகிந்துகொண்டனர். மேலும் நடிகர் நிவின் பாலி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, மிக்க நன்றி. சர்வம் மாயா படத்திற்குப் பின்னால் இருந்த முழு குழுவினருக்கும், உலகெங்கிலும் உள்ள எங்கள் அற்புதமான பார்வையாளர்களுக்கும். அகிலின் படத்திற்காக சத்யன் சாரிடமிருந்து இந்த கௌரவத்தைப் பெற்றபோது என் இதயம் நிறைவடைந்தது என்றும் அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அந்த படத்திற்கு முதலில் நோ சொன்னேன்.. ஆனால் – ஐஸ்வர்யா லெக்ஷ்மி பேச்சு!

நடிகர் நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Sai Abhyankkar: பவழ மல்லி.. கல்யாண வைப்பில் சாய் அபயங்கரின் புது பாடல் புரோமோ இதோ!

Follow Us
Related Stories
Rukmini Vasanth: தேவையற்ற ஜூம்கள்.. தவறாக பயன்படுத்தப்படும் நடிகைகளின் போட்டோஸ் – ருக்மிணி வசந்த் கண்டனம்!
Suraj Venjaramoodu: யூத் படத்தில் நடிக்க ஓகே சொன்னதற்கு காரணம் இதுதான் – சுராஜ் வெஞ்சாரமூடு!
கே ட்ராமா பிடிக்குமா உங்களுக்கு? தமிழில் காணக் கிடைக்கும் இந்த கேன் திஸ் லவ் பி ட்ரான்ஸ்லேட்டெட்? சீரிசை மிஸ் செய்யாதீர்கள்!
ViRosh: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை.. இன்பதிர்ச்சியை கொடுத்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி!
அல்லு அர்ஜூன் வீட்டு திருமண விழாவில் பேசில் ஜோசஃப்… அப்போ கூட்டணி கன்ஃபார்மா?
அல்லு அர்ஜுன் – அட்லீயின் AA22 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது? – ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஹேப்பி நியூஸ்!
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ