நிவின் பாலி – மமிதா பைஜு நடிப்பில் உருவாகும் படத்தை தயாரிக்கும் ஃபகத் பாசில்!

Bethlehem Kudumba Unit: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் நிவின் பாலி மற்றும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மமிதா பைஜு இருவரும் ஒரு புதிய படத்திற்காக கூட்டணி சேர்ந்துள்ளனர். இதுகுறித்த அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

நிவின் பாலி - மமிதா பைஜு நடிப்பில் உருவாகும் படத்தை தயாரிக்கும் ஃபகத் பாசில்!

பெத்லகேம் குடும்ப யுனிட் படக்குழு

Published: 

05 Jul 2025 10:57 AM

மலையாள சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருவபர் நிவின் பாலி (Actor Nivin Pauly). இவரது நடிப்பில் வெளியான பிரேமம் படம் இவரை தென்னிந்தியா முழுவதும் பிரபலப் படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதே போல குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன மமிதா பைஜு தற்போது நாயகியாக கலக்கி வருகிறார். கடந்த 2024-ம் ஆண்டு மமிதா பைஜு (Actress Mamitha Baiju) நாயகியாக நடித்து வெளியான படம் பிரேமலு. இந்தப் படத்திற்கு பிறகு இதில் நடித்த நடிகர்களுக்கு வாய்ப்புகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடிகை மமிதா பைஜுவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகை மமிதா பைஜு தற்போது தமிழில் வரிசையாக 4 படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மலையாள சினிமாவில் நடிகர் நிவின் பாலி உடன் இணைந்து நடிகை மமிதா பைஜு நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

நிவின் பாலி – மமிதா பைஜு கூட்டணியில் உருவாகும் படம்:

நடிகர்கள் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் பெத்லகேம் குடும்ப யுனிட். இந்தப் படத்தை பிரேமலு படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தில் திரைக்கதையை கிரிஷ் ஏடி மற்றும் கிரன் ஜோஷி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரேமலு படத்திற்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி சற்று அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தாலும் அவர்களுக்கு சர்ப்ரைஸாக உள்ளதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். பெத்லகேம் குடும்ப யுனிட் படத்திற்கு இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையமைக்க உள்ளார்.

பிரேமலு படத்தை தயாரித்த அதே குழு தற்போது கிரிஷ் ஏடியின் இந்த பெத்லகேம் குடும்ப யுனிட் என்ற படத்தையும் தயாரிக்க உள்ளது. அதன்படி பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பகத் ஃபாசில், திலேஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகியோர் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அறிவிப்பு தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.

பெத்லகேம் குடும்ப யுனிட் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்ட நிவின் பாலி: