Nithya Menen : சிங்கிளாக நிம்மதியாக வாழ்கிறேன்.. – நித்யா மேனன்!

Nithya Menen About Life : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நித்யா மேனன். இவரின் நடிப்பில் தலைவன் தலைவி திரைப்படமானது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சிங்கிகளாக இருப்பதாகக் கிடைக்கும் பலன்களைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

Nithya Menen : சிங்கிளாக நிம்மதியாக வாழ்கிறேன்..  - நித்யா மேனன்!

நித்யா மேனன்

Updated On: 

29 Jul 2025 19:08 PM

 IST

நடிகை நித்யா மேனனின் (Nithya Menen) நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த விதத்தில் இவருக்குத் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எனக் கூறலாம் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் நடிகர் தனுஷ் (Dhanush) வரை பல நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். இந்த வரிசையில் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் தலைவன் தலைவி (Thalaivan Thalavii). இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு (Vijay Sethupathi) ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்து அசத்தியுள்ளார். குடும்ப கதைக்களத்துடன்  இப்படமானது கடந்த 2025, ஜூலை 25ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்தப் படமானது மக்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்று வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை நித்யா மேனன், தனியாக இருப்பதாகக் கிடைக்கும் மகிழ்ச்சி மற்றும் மனநிம்மதி குறித்துப் பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர், “நான் சிங்கிளாக நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன், நான் நினைத்தால் ஏந்துவேண்டுமானாலும் செய்யலாம்” என அவர் அதில் பேசியுள்ளார். மேலும் அவர் பேசியது குறித்துத் தெளிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : ராஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

சிங்கிளாக இருப்பது குறித்து நடிகை நித்யா மேனன் பேச்சு :

அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை நித்யா மேனன், “நான் சிங்கிளாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் எது நினைத்தாலும் அதை என்னால் செய்யமுடியும். நான் சாப்பிடவேண்டும் என்றால் சாப்பிடுவேன், வேண்டாம் என்றால் சாப்பிடமாட்டேன். மேலும் நான் தூங்க வேண்டும் என்றால் தூங்குவேன், அது எந்த நேரமாக இருந்தாலும் தூங்குவேன். யாராலும் என்னை என்னவென்று கேட்க இல்லை” என நடிகை நித்யா மேனன் கூறியிருந்தார். திருமணமாகாத வாழ்க்கையில் எந்த அழுத்தமும், எந்த கட்டுப்பாடும் இருக்காது என நடிகை நித்யா மேனன் அதில் பேசியிருப்பார்.

இதையும் படிங்க : அஜித் குமாருடன் படம் பண்ணுவது எனது ஆசை.. லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாகப் பேச்சு!

தலைவன் தலைவி பட போஸ்டர் :

தலைவன் தலைவி திரைப்படத்தின் வரவேற்பு :

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி மாறும் நித்யா மேனன் முன்னணி வேடத்தில் நடித்திருந்த படம் தலைவன் தலைவி. பேமிலி எண்டர்டெயினராக இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வருகிறது. இப்படமானது கடந்த 2025, ஜூலை 25ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. மேலும் வார இறுதியை ஒட்டி இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.