Nagarjuna : கூலி படத்திற்காக லோகேஷ் என்னிடம் அணுகியது இப்படிதான்.. நாகார்ஜுனா பேச்சு!
Nagarjuna Talk About Lokesh Kanagaraj Coolie Story Narration : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியிருப்பது கூலி. நடிகர் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் இணைந்து நடித்திருக்கிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நாகார்ஜுனா கூலி படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை சொன்ன விதம் பற்றி பேசியிருக்கிறார்.

கோலிவுட் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் லியோ (Leo). கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படத்தில் தளபதி விஜய் (Thalapathy Vijay) கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த்துடன் (Rajinikanth) அவரின் 171வது திரைப்படத்தில் இணைந்தார் லோகேஷ் கனகராஜ். இந்த கூலி (Coolie) படத்தில் ரஜினிகாந்த் அதிரடி நாயகனாக நடித்துள்ளார். கடந்த 2024ம் ஆண்டு ஆரம்பத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், பல இடங்களில் பிரம்மாண்டமாக நடந்து வந்தது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா (Nagarjuna) , பாலிவுட் நடிகர் அமீர்கான் (Aamir Khan) மற்றும் கன்னட நடிகர் உபேந்திரா (Upendra Rao) எனப் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
நடிகர் நாகார்ஜுனா கூலி படத்தை தொடர்ந்து, தனுஷின் (Dhanush) குபேரா (Kuberaa) படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படமானது வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படம் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் நாகார்ஜுனா, இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் முதலில் அவரிடம் அணுகியது குறித்தும், கூலி படத்தில் நடித்தது குறித்தும் பேசியுள்ளார்.




கூலி படத்தில் லோகேஷ் கனகராஜின் அணுகுமுறை பற்றி நாகார்ஜுனா பேச்சு :
அந்த நேர்காணலில் பேசிய நாகார்ஜுனா, முதலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்து பேச ஆரம்பித்தார். அதில் அவர், “இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்னிடம் கூலி படத்திற்காக முதலில் அணுகியபோது, அவர் என்னிடம் “கூலி படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதற்கு உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கிறதா ?, இருக்கிறது என்றால் ஒரு கப் காபி சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிவிடுகிறேன்” என்றுதான் என்னிடம் கூறினார். உடனே நான் அவரிடம் “படத்தின் ஸ்கிரிப்ட் பற்றி கூறுங்கள், நான் நெகடிவ் கதாபாத்திரங்களை எதிர்ப்பவன் அல்ல” என்று கூறினேன். மேலும் அவர் என்னிடம் கூலி படத்தின் கதையைக் கூறத்தொடங்கினார். அந்த ஸ்கிரிப்ட்டை பாதியிலே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. பின் அவரிடம் 6 -7 தடவை மீண்டும் கதை குறித்து கேட்டேன் என்று நடிகர் நாகார்ஜுனா ஓபனாக பேசியிருந்தார்.
நாகார்ஜுனா பேசிய வீடியோ :
#LokeshKanagaraj: Do you mind playing antagonist role in #Coolie, if not we can have cup of tea & I’ll leave😀#Nagarjuna: Tell me the script, I’m not against negative role. Halfway through the script i got hooked🤯. 6-7 times done Re-Narration & liked🔥pic.twitter.com/W5VP73Zhr3
— AmuthaBharathi (@CinemaWithAB) June 16, 2025
கூலி படத்தின் மீது எதிர்பார்ப்பு :
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த கூலி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள நிலையில், மேலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டும் இருக்கும் நிலையில், விரைவில் இப்படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.