தனுஷ் உடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி… நடிகர் நாகர்ஜுனா!

Actor Nagarjuna: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நாகர்ஜுனா. இவர் தமிழில் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தனுஷ் உடன் இணைந்து குபேரா படத்தில் நடித்து உள்ளார் நாகார்ஜுனா.

தனுஷ் உடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி... நடிகர் நாகர்ஜுனா!

தனுஷ் மற்றும் நாகர்ஜுனா

Updated On: 

04 Jun 2025 11:31 AM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குபேரா. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான இந்தப் படத்தில் நடிகர்கள் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற 20-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம்  ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்தும் குபேரா படம் குறித்தும் நடிகர் நாகர்ஜுனா பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சேகர் கம்முலாவுடன் இணைந்து படம் செய்ய வேண்டும் என்ற தனது நீண்டநாள் ஆசையை நடிகர் நாகார்ஜுனா வெளிப்படையாக தெரிவித்தார்.

சேகர் கம்முலாவுடன் இணைந்து பணியாற்ற ஆசை:

அந்தப் பேட்டியில் நடிகர் நாகர்ஜுனா தெரிவித்ததாவது, ஹேப்பி டேஸ் படத்திலிருந்தே நான் இயக்குநர் சேகர் கம்முலா உடன் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டேன். சேகர் கம்முலா குபேரா படத்தில் நடிப்பதற்காக என்னிடம் வந்த கேட்டபோது, ​​நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன். இந்த படத்தில் நான் நடித்துள்ள கதாப்பாத்திரம் நான் முன்பு செய்தது போல அல்ல என்றும் தெரிவித்து இருந்தார்.

தனுஷ் உடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி:

தொடர்ந்து பேசிய நடிகர் நாகர்ஜுனா, தான் சினிமாவில் மிகவும் உயர்வாக இருப்பவர் என்று நினைக்கும் ஒருவருடன் திரையைப் பகிர்ந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றாக உள்ளது என்று தனுஷ் குறித்து தெரிவித்தார். மேலும் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  மேலும் படப்பிடிப்பில் நாங்கள் பேசிக் கொண்ட நிமிடங்களை நான் எப்போதும் பொக்கிஷமாகக் வைத்து இருப்பேன் என்றும் நடிகர் நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.

குபேரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

தனுஷின் குபேரா படம்:

குபேரா படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் வெளியான போது நடிகர் தனுஷ் பிச்சைக்காரரைப் போல காட்சி அளித்தது ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்துயது.

அதனைத் தொடர்ந்து நடிகர்கள் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகாவின் அறிமுக வீடியோவும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டது. அதைப் பார்க்கும் போது பழிவாங்கும் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது என்பது தெரிகிறது.