Kantara Chapter 1: தெய்வீகத்தின் மயக்கும் கலவை… ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தை புகழ்ந்த சந்தோஷ் நாராயணன்!

Santhosh Narayanan Praises Kantara Chapter 1: பான் இந்திய திரைப்படமாக கடந்த 2025 அக்டோபர் 2ம் தேதியில், மிக பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் காந்தாரா சாப்டர் 1. இந்த படமானது தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுவரும் நிலையில், தமிழ் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் புகழ்ந்துள்ளார்.

Kantara Chapter 1: தெய்வீகத்தின் மயக்கும் கலவை... காந்தாரா சாப்டர் 1 படத்தை புகழ்ந்த சந்தோஷ் நாராயணன்!

காந்தாரா சாப்டர் 1 படம்

Published: 

05 Oct 2025 23:17 PM

 IST

கன்னட சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இயக்குநராக கலக்கிவருபவர் ரிஷப் ஷெட்டி (Rishabh Shetty). இவரின் முன்னணி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியாகி பான் இந்திய வெற்றியை பெற்ற திரைப்படம்தான் காந்தாரா (Kantara). இந்த படத்தை இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். சுமார் ரூ 16 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படம் சுமார் ரூ 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ஹிட் கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக, காந்தாரா படத்திற்கு முன் நடந்த கதையை அடிப்படையாக கொண்டு வெளியாகியிருக்கும் படம்தான் காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1) திரைப்படம். இந்த படமானது கடந்த 2025 அக்டோபர் 2ம் தேதி முதல் பான் இந்திய மொழிகளில் வெளியாகியிருந்தது.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை விடவும் இப்படம் வெளியாகி, பாசிடிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பல்வேறு பிரபலங்களும் பாராட்டிவருகின்றனர். அந்த வகையில் தமிழ் முன்னணி இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனும் (Santhosh Narayanan) பாராட்டியுள்ளார். இது தொடர்பான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம்… 18 ஆண்டுகளை நிறைவு செய்தது கற்றது தமிழ் படம்

சந்தோஷ் நாராயணன் பாராட்டியது தொடர்பாக காந்தாரா படக்குழு வெளியிட்ட பதிவு :

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இந்த காந்தாரா சாப்டர் 1 படத்தை பாராட்டி பதிவை வெளியிட்டுள்ளார். இதில் அவர், “நாட்டுப்புறக் கதைகள், கிளர்ச்சி மற்றும் தெய்வீகத்தன்மை கொண்டதாக இருந்தது இந்த காந்தாரா சாப்டர் 1.

உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம் ரிஷப் ஷெட்டி மற்றும் காந்தாரா படக்குழு. மேலும் இசையமைப்பாளர் பி. அஜனேஷ் லோக்நாத், உங்கள் வெற்றியை தனிப்பட்டதாக உணர்கிறேன்” என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாராட்டியுள்ளார்.

காந்தாரா சாப்டர் 1 படத்தின் வசூல் :

இந்த காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டி முன்னணி வேடத்தில் நடிக்க, நடிகர்கள் ஜெயராம், ருக்மிணி வசந்த் உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இதில் நடிகை ருக்மிணி வசந்தி கதாபாத்திரம், இதுவரை நடித்த படங்ககளை விடவும் மிகவும் வித்தியாசமாக காந்தாரா படத்தில் அவரின் கதாபாத்திரம் அமைந்திருந்தது.

இதையும் படிங்க: இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்ற ரஜினிகாந்த்.. எளிமையான உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரல்!

இதில் அவரின் தனித்துவமான நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றியிருந்தது. இந்த படமானது வெளியாகி 3 நாட்களை கடந்த நிலையில், இதுவரை உலகமெங்கும் சுமார் ரூ 193 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பதிவு koimoi என்ற இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.