STR49: வெற்றிமாறன் – சிலம்பரசனின் ‘STR49’ படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷா? அனிருத்தா? – வைரலாகும் தகவல்!

STR49 Movie Update: தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் திரைப்படம்தான் STR49. இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசனின் கூட்டணியில் தயாராகிவரும் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல்கள இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திவருகிறது. இது குறித்து தெளிவாக பார்க்கலாம்.

STR49: வெற்றிமாறன் - சிலம்பரசனின் STR49 படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷா? அனிருத்தா? - வைரலாகும் தகவல்!

சிலம்பரசனின் STR49

Published: 

03 Oct 2025 20:45 PM

 IST

கோலிவுட் சினிமாவில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் STR49. இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்க, நடிகர் சிலம்பரசன் (Silambarasan) முன்னணி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படமானது கடந்த 2025 செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டநிலையில், அதைத் தொடர்ந்து இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசனின் கூட்டணியில் முதன் முறையாக படம் உருவாகவுள்ள நிலையில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த படத்தை வி க்ரியேஷன் (V Creation) என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. மேலும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக இசையமைக்கவுள்ளதாக அவரே , முன்பு ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். இந்நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகிவரும் தகவலின்படி, இந்த STR49 படத்தில் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இதையும் படிங்க: தேசிய விருது தயாரிப்பாளருடன் சிவகார்த்திகேயன்.. வைரலாகும் தகவல்!

STR49 ப்ரோமோ ரிலீஸ் தொடர்பாக படக்குழு வெளியிட்ட அறிவிப்பது பதிவு :

STR49 படத்தின் கதைக்களம் :

சிலம்பரசனின் இந்த STR49 திரைப்படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகவுள்ளதாம். தனுஷின் வட சென்னை படத்தின் கதையை பின்னணியாக வைத்து இந்த படமானது தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சிலம்பரசன், வட சென்னை படத்தில் ராஜனின் கதாபாத்திரத்தினை அடிப்படையாக ஒண்டு உருவாகும் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழில் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர் இவர் தான்!

இந்த படமும் வட சென்னை பட தொகுப்பின் ஒன்றாக இருக்கும் என் வெற்றிமாறனுக்கு தெரிவித்திருந்தார். அதன் படி சிலம்பரசனின் இந்த STR49 படம் முழுவதும் ஒரு கேங்ஸ்டர்ஸ் கதைக்களம் கொண்ட படமாக அமையும் என கூறப்படுகிறது. மேலும் இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் தனுஷும் இதில் கேமியோ வேடத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூப்படுகிறது.

சிலம்பரசனின் புதிய படங்கள் :

நடிகர் சிலம்பரசன் இந்த STR49 படத்தைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 3 படங்ககளை தனது கைவசம் வைத்துள்ளார். இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் ஒரு படம், STR50 திரைப்படம் மற்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR51 என 3 படங்களை தனது கைவசத்தில் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.