தனி ஒருவன் 2 தாமதத்திற்கு காரணம் இதுதான் – மோகன் ராஜா பேச்சு!

Thani Oruvan 2 Delay: பிரபல இயக்குநர்களில் ஒருவர் மோகன் ராஜ். இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில், கடந்த 2015 ஆம் ஆண்டுல வெளியாகி ஹிட் கொடுத்த படம் தனி ஒருவன். இந்த படத்தின் பார்ட் 2 படம் உருவாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் தாமதத்திற்கான காரணம் பற்றி அப்படத்தின் இயக்குநர் மோகன் ராஜா கூறியுள்ளார்.

தனி ஒருவன் 2 தாமதத்திற்கு காரணம் இதுதான் -  மோகன் ராஜா பேச்சு!

ரவி மோகனின் தனி ஒருவன் 2

Published: 

16 Sep 2025 18:13 PM

 IST

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்திருப்பவர் ரவி மோகன் (Ravi Mohan). இவரின் நடிப்பில் தமிழில் தற்போது கராத்தே பாபு (Karathey babu), பராசக்தி (Parasakthi) , ஜீனி மற்றும் ப்ரோகோட் (Bro code) என பல்வேறு திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் தற்போது இவரின் தயாரிப்பு நிறுவனமான, ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் கீழ் 2 படங்கள் உருவாகிவருகிறது. இதில் இயக்குநராக ரவி மோகன் இயக்கும் படம்தான் ஆன் ஆர்டினரி மேன் (An Ordinary Man). இதில் நடிகர் யோகிபாபு (Yogi Babu) ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கும் பிரம்மாண்டமாக தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், நடிகர் ரவி மோகனின் நடிப்பில்  உருவாகவுள்ள படம்தான் தனி ஒருவன் 2 (Thani Oruvan 2).

இந்த படத்தை இயக்குநரும், ரவி மோகனின் சகோதருமான மோகன் ராஜா (Mohan Raja) இயக்கவுள்ளாராம். இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், தனி ஒருவன் 2 படத்தின் தாமதத்திற்கு காரணம் பற்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : அந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்கவேண்டும்.. தனது ஆசையை தெரிவித்த பிரியங்கா மோகன்!

தனி ஒருவன் 2 படத்தின் தாமதம் பற்றி மோகன் ராஜா விளக்கம் :

அந்த நிகழ்ச்சியில், தொகுப்பாளர் இயக்குநர் மோகன் ராஜாவிடம் தனி ஒருவன் 2 படத்தினை பற்றி அப்டேட் கேட்டிருந்தார். அதில் அவர், “சமீபத்தில் அர்ச்சனா கல்பாதியுடன் ஒரு மீட்டிங் இருந்தது, சொல்லப்போனால் இன்னும் இந்த படத்தின் பட்ஜெட் போடவில்லை. அந்த மீட்டிங்கின் போது இந்த கதையை கேட்டுவிட்டு, இது தற்போது சரியான நேரமில்லை என்று கூறினார். நானும் அவரிடம் தனி ஒருவன் 2 படத்தின் கதையைத்தான் கேட்டீர்களா என்று கேட்டேன்.

இதையும் படிங்க : மகன் லிங்கா உடன் டான்ஸ் ஆடிய தனுஷ் – வைரலாகும் வீடியோ!

அப்போதுதான் அவர் சொன்னார், இதற்கு நிறைய பட்ஜெட் தேவைப்படுகிறது, தொழில்நுட்பங்கள் பெரிதாக வேண்டும் என கூறினார். இந்நிலையில் இப்படமானது தாமதமாகலாம், ஆனால் அது நிச்சயமாக நடக்கும் என இயக்குநர் மோகன் ராஜா அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தனி ஒருவன் 2 படம் குறித்து மோகன் ராஜா பேசிய வீடியோ :

தனி ஒருவன் திரைப்படம் :

கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குநர் மோகன் ராஜா இயக்க, ரவி மோகன் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருந்த படம் தனி ஒருவன். இந்த படத்தில் நடிகர் அரவித் சுவாமி வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்த நிலையில், படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட்டாகியிருந்தது.

இப்படமானது வெளியாகி இந்த 2015 ஆம் ஆண்டுடன் சுமார் 10 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. மேலும் இப்படத்தின் பாகம் 2 உருவாக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.