காந்தி டால்க்ஸ் படத்திலிருந்து வெளியானது மிளிரும் ஒளியே பாடலின் வீடியோ!
Milirum Oliye Song | தமிழ் சினிமாவில் மௌனப் படமாக உருவாகி முன்னதாக திரைப்பட விழாவில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தப் படம் காந்தி டால்கீஸ். இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில் படத்திலிருந்து மிளிரும் ஒளியே என்ற பாடல் வெளியாகி உள்ளது.

காந்தி டால்க்ஸ்
சினிமா என்ற ஒன்று மக்களிடையே அறிமுகம் ஆன போது முதலில் மௌனப் படங்களாகவே உருவாகி வெளியாகி வந்தது. அதனைத் தொடர்ந்து பேசும் படங்கள் வெளியாகி வந்தது. சினிமா தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது. அந்த வகையில் தற்போது உள்ள சினிமா மிகவும் அதிக தொழில் நுட்பங்களுடன் படங்கள் உருவாகி வருகின்றது. இப்படி பல தொழில் நுட்பங்கள் சினிமாவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு மௌனப் படம் ஒன்று உருவாகி ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் கடந்த 2023-ம் ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை பிரமிப்பாகவும், வியப்பாகவும் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கார்ந்தி டால்கீஸ் படத்தை இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான கியூரியஸ் மூவிமில் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் ராஜேஷ் கெஜ்ரிவால் மற்றும் கிஷோர் பாண்டுரங் பெலேகர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
காந்தி டால்க்ஸ் படத்திலிருந்து வெளியானது மிளிரும் ஒளியே பாடல்:
இந்த நிலையில் படம் வருகின்ற ஜனவரி மாதம் 30-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. தொடர்ந்து படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ள நிலையில் படத்தில் இருந்து மிளிரும் ஒளியே என்ற பாடலைப் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை கிருத்திகா நெல்சன் எழுதி இருந்த நிலையில் பாடகர் முகமது அஸ்லாம் பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
When emotions find a tune – pure, personal and powerful ❤️#MilirumOliye from #GandhiTalks is out now.
An @arrahman musical.@thearvindswami @aditiraohydari @SIDDHARTH23OCT @kishorbelekar #UmeshKrBansal @rajeshkejriwal @MeerraChopra @ZeeStudios_… pic.twitter.com/RHKI9grVLF
— VijaySethupathi (@VijaySethuOffl) January 13, 2026
Also Read… 2 வருட கோபம்… 2 வருட புரட்சி… திரையரங்குகளில் வெளியாகி 2 ஆண்டுகளைக் கடந்தது கேப்டன் மில்லர் படம்