Balan Movie: கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ பட இயக்குநரின் புது படம்!

Cannes Film Festival 2026: மலையாள சினிமாவில் மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தை இயக்கி, தென்னிந்திய முழுவதும் பிரபலமானவர் இயக்குநர் சிதம்பரம். இவரின் இயக்கத்தில் தற்போது புதிதாக பாலன் என்ற படமானது தயாராகியுள்ள நிலையில், இப்படம் 2026ம் மே 14ல் பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஸ்க்ரீன் செய்யப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Balan Movie: கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் மஞ்சும்மெல் பாய்ஸ் பட இயக்குநரின் புது படம்!

பாலன் திரைப்படம்

Updated On: 

03 May 2026 13:14 PM

 IST

தென்னிந்திய சினிமாவில், குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம்தான் மஞ்சும்மெல் பாய்ஸ் (Manjummel Boys). இப்படத்தை இயக்குநர் சிதம்பரம் (Chidambaram) இயக்கியிருந்தார். பிரபல மலையாள இயக்குநராக இவர், இயக்கத்தில் இந்த படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதில் நடிகர்கள் ஷோபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி மற்றும் தீபக் பாரம்போல் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த் படமானது கோடைகாலனில் குணா குகையில் சிக்கிக்கொண்ட நண்பனை காப்பாற்ற முயற்சிக்கும், நண்பர்கள் கூட்டம் குறித்த திரில்லர் கதைக்களத்தில் அமைந்திருந்தது. இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. அந்த வகையில் இப்படத்தின் இயக்குநர் சிதம்பரத்தின் இயக்கத்தில், புதிதாக தயாராகியுள்ள படம்தான் பாலன் தி பாய் (Balan :The Boy).

இப்படமானது ஒரு சிறுவனின் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் எப்போது வெளியாகும் என ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இப்படத்தை வரும் 2026 மே 14ம் தேதியில் நடைபெறவுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் (Cannes Film Festival 2026) திரையிடவுள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: அஜித் குமார் அரசியல் வரவேண்டும் என விரும்புகிறேன் – சுந்தர் சி ஓபன் டாக்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் பாலன் திரைப்படம் :

இயக்குநர் சிதம்பரத்தின் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த பாலன் படமானது, வித்தியாசமான கதையில் உருவாகியுள்ளது. இப்படம் வரும் 2026 மே 14ம் தேதியில், பிரான்சில் நடைபெறவுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறதாம். இந்த திரைப்பட விழா வரும் 2026 மே 12ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்த வகையில் வரும் 2026 மே 14ம் தேதியில் இரவு 8 மணியளவில் திரையிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது இது குறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: நிவின் பாலி – மமிதா பைஜூவின் பெத்லஹேம் குடும்ப யூனிட் பட ஷூட்டிங் நிறைவு – வைரலாகும் பதிவு!

கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலன் திரைப்பட திரையிடல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

இந்த பாலன் படத்தை, ஜன நாயகன் மற்றும் டாக்ஸிக் போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்திருந்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை சிதம்பரம் இயக்க, கதையை இயக்குநர் ஜித்து மாதவன் எழுதியுள்ளார். இவர்தான் சூர்யா47 படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..