இயக்குநர் பாலா எனக்கு ஹீரோ – புழந்து பேசிய இயக்குநர் மணிரத்னம்

Director Maniratnam: தமிழ் சினிமாவில் மிகவும் அழுத்தமான கதைகளையும் யாரும் பேச தயங்கும் காட்ட மறுக்கும் பல விசயங்களை தனது படங்களில் அப்படியே காட்டுபவர் இயக்குநர் பாலா. இவரைப் பற்றி இயக்குநர் மணிரத்னம் விழா ஒன்றில் புகழ்ந்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

இயக்குநர் பாலா எனக்கு ஹீரோ - புழந்து பேசிய இயக்குநர் மணிரத்னம்

மணிரத்னம் மற்றும் பாலா

Published: 

05 Jun 2025 07:00 AM

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநர் மீது அத்தனை குறைகள் கூறியுள்ளனர் என்றால் அது இயக்குநர் பாலா (Director Bala) தான். அவரை சைக்கோ என்று சாடிஸ்ட் மனிதாபிமானம் இல்லாதவர். படப்பிடிப்பில் நடிகர்களை அடிப்பார் என்று பல குற்றச்சாட்டுகள் இயக்குநர் பாலா மீது வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் முன்னதாக பட விழா ஒன்றில் இயக்குநர் பாலா குறித்து இயக்குநர் மணிரத்தினம் பாராட்டி பேசியது தற்போது வைரலாகி வருகின்றது. அந்த விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம், பாலா வந்து மிகச் சிறந்த இயக்குநர். ஆனால் எனக்கு வந்து அவர் ஹீரோ. அவரோட ஒவ்வொரு படத்தையும் பார்க்கும் போது அன்னைக்கு அவர் எனக்கு ஹீரோவா மாறிவிடுகிறார். அப்போ எப்படி எனக்கு ஹீரோவா தெரியிராரோ அப்படியே இப்ப வரைக்கும் அவர் எனக்கு ஹீரோவாக இருக்கிறார் என்று மணிரத்தினம் தெரிவித்தார்.

வருசத்துக்கு ஒரு படம் பன்னலாம்…

தொடர்ந்து பேசிய இயக்குநர் மணிரத்னம், பாலாகிட்ட எனக்கு ஒரே ஒரு குறைதான். நான் அதை அவர பார்க்கும் போது எல்லாம் சொல்லுவேன். ரொம்ப ஸ்லோவா இருக்கீங்க பாலா. நீங்க நிறைய பன்னனும். வருசத்துக்கு ஒரு படமாவது பன்னலாம். தமிழ் சினிமாவின் தரம் உயரும். எவ்வளவோ படம் தமிழ் சினிமாவின் தரத்தை கீழே கொண்டுபோய்ட்டு இருக்கு. நீங்க பன்னாதான் மேல வரும். அதனால தயவு செஞ்சு அடிக்கடி படம் பன்னுங்க எங்களுக்காக என்று அந்த வீடியோவில் மணிரத்னம் பேசியுள்ளார்.

வைரலாகும் இயக்குநர் மணிரத்னம் வீடியோ:

இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் ஹிட் அடித்தப் படங்கள்:

இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் மிகவும் மனதை கனமாக்கக் கூடியதாக் இருந்தாலும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் மற்றும் வணங்கான் என அனைத்துப் படங்களுமே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக நடிகர் அருண் விஜயை நாயகனாக வைத்து இயக்குநர் பாலா இயக்கிய படம் வணங்கான். முன்னதாக நடிகை சூர்யாவை வைத்து எடுக்க இருந்த நிலையில் சில காரணங்களால் அவர் படத்தை விட்டு விலகியதால் அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ளார்.

படம் கடந்த ஜவரி மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் நடிகர் அருண் விஜயின் நடிப்பு பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.