மக்கள் செல்வனுடன் புதிய படத்திற்காக இணையும் மணிரத்னம்.. நாயகி இவரா?
Mani Ratnam-Vijay Sethupathi Reunion: தென்னிந்திய சினிமாவில், குறிப்பாக தமிழ் மொழியில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் இறுதியாக தலைவன் தலைவி வெளியான நிலையில், தற்போது தெலுங்கு படத்தில் பிசியாக இருந்துவருகிறார். இவரின் புதிய படத்தை மணிரத்னம் இயக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் மற்றும் விஜய் சேதுபதி
கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த்துவருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் பிரபல நடிகராக இருந்துவரும் நிலையில், இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இவர் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இவர் நடித்திருக்கிறார். அந்த வகையில் தற்போது தமிழில் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil) நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்துவரும் தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் (Samyuktha Menon) நடித்துவருகிறார். இப்படத்தில் பிச்சைக்காரன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துவருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த படங்களில் கதையையும் இவர் கேட்டுவருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் இயக்குநர் மணி ரத்னத்தின் (Mani Ratnam) இயக்கத்தில், மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. தக் லைஃப் படத்தை அடுத்ததாக இயக்குநர் மணிரத்னம் இந்த படத்தில் இணைவதாகவும் கூறப்படுகிறது. இதில் கதாநாயகியாக நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: சிகிரி என்றால் என்ன? இணையத்தில் கவனம் பெறும் ஏ.ஆர்.ரகுமான் போஸ்ட்
நடிகை ருக்மிணி வசந்தின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :
விஜய் சேதுபதியுடன் மீண்டும் புதிய படத்தில் இணையும் ருக்மிணி வசந்த்:
நடிகர் விஜய் சேதுபதி ருக்மிணி வசந்த் இருவரும் இணைந்து ஏற்கனவே ஏஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ஆறுமுக குமாரின் இயக்கத்தில் வெளியான இப்படத்தின் மூலம் இந்த கூட்டணி முதல் முறையாக இணைந்திருந்தது. இந்த படத்தின் வரவேற்பிற்கு பின் மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால இது குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவும் இல்லை. விரைவில் மணிரத்னம் உடனான கூட்டணி படத்தின் அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : நவம்பர் மாதம் இத்தனை படங்கள் ரீ ரிலீஸ் ஆகிறதா? லிஸ்ட் இதோ
7- வருடத்திற்கு பின் மீண்டும் இணையும் மணிரத்னம் மற்றும் விஜய் சேதுபதி :
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மணிரத்னம் கூட்டணியில் ஏற்கனவே 1 படம் வெளியாகியிருக்கிறது. கடந்த 2018ம் ஆனதில் வெளியான செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் சிலம்பரசன், விஜய் சேதுபதி, அரவித் சுவாமி மற்றும் அருண் விஜய் என பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இதில் விஜய் சேதுபதி ஒரு நெகடிவ் வேடத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து சுமார் 7 வருடங்களுக்கு பின் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.