எனக்கு மம்முட்டினு பெயர் வச்சது இவர்தான்… நெகிழ்ந்து பேசிய மம்முட்டி – வைரலாகும் வீடியோ

The Untold Story Behind Mammootty Name: மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவருக்கு பான் இந்திய அளவில் ரசிகர்கள் உள்ளார்கள். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனக்கு மம்முட்டி என்று பெயர் வைத்த நண்பர் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

எனக்கு மம்முட்டினு பெயர் வச்சது இவர்தான்... நெகிழ்ந்து பேசிய மம்முட்டி - வைரலாகும் வீடியோ

மம்முட்டி மற்றும் அவரது நண்பர்

Published: 

29 Nov 2025 20:44 PM

 IST

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. 1971-ம் ஆண்டு முதல் நடிகராக வலம் வரும் மம்முட்டி தொடர்ந்து பெயரிடப்படாத கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில்  கடந்த 1980-ம் ஆண்டு வெளியான வில்லுக்கனுண்டு ஸ்வப்னங்கள் என்ற படத்தின் மூலமாக பெயரிடப்பட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகர் மம்முட்டி அதனைத் தொடர்ந்து கதையின் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் நடிகர் மம்முட்டிக்கு தற்போது 74 வயது ஆகிறது. இத்தனை வயது ஆனாலும் தனது நடிப்பிற்கு ப்ரேக் எடுக்காமல் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் மம்முட்டியின் நடிப்பில் இதுவரை இரண்டு படங்கள் வெளியாகி உள்ளது.

அந்த இரண்டு படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்ததாக நடிகர் மம்முட்டி நடிப்பில் வருகின்ற 5-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு கலம்காவல் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ட்ரெய்லர் முன்னதாக வெளியான நிலையில் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் மம்முட்டி தனக்கு மம்முட்டி என்று பெயர் வைத்த நண்பர் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

முகமது குட்டி மம்முட்டியாக மாறியது எப்படி?

அந்த விழாவில் மம்முட்டி பேசியதாவது தனது பெயர் முகமது குட்டி என்பதை கல்லூரியில் சொல்ல சங்கடபட்டுகிட்டு உமர் ஷெரீப் என்று அனைவரிடம் கூறியிருந்தேன். இப்படி இருக்கு நிலையில் ஒருநாள் எனது பாக்கெட்டில் இருந்து ஐடி கார்ட் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தது. அந்த ஐடி கார்டை பார்த்த எனது நண்பர் முகமது குட்டி என்ற எனது பெயரை மம்முட்டியா உங்க பெயர் என்றார். அப்போது இருந்தே என்னை அனைவரும் மம்முட்டி என்றே அழைத்து வருகிறார்கள் என்று தெரிவித்தார் மம்முட்டி.  மேலும் அந்த நண்பரை மேடைக்கு அழைத்து நெகிழ்ச்சியாக பேசினார் நடிகர் மம்முட்டி. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… வாத்தி பட ஷூட்டிங்கில் அகாண்டா படத்தை புகழ்ந்து பேசிய தனுஷ் – நடிகை சம்யுக்தா மேனன் ஓபன் டாக்

இணையத்தில் வைரலாகும் மம்முட்டியின் பேச்சு:

Also Read… இந்த வாரம் பிக்பாஸ் வீட்டு தல எஃப்ஜேவை லெஃப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ!

Related Stories
ஆதார் அட்டைதாரர்களே.. இந்தத் தவறுகள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்.. அரசு எச்சரிக்கை!!
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!
"பாட்டி.. மொத்த சமோசாவும் காலி".. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!
‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..