ஒவ்வொரு நிழலும் ஒரு கதையை மறைக்கிறது… வெளியானது மம்முட்டியின் மாஸ் நடிப்பில் கலம்காவல் படத்தின் ட்ரெய்லர்
Kalamkaval Movie Official Trailer | நடிகர் மம்முட்டியின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் கலம்காவல். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது வைரலாகி வருகின்றது.

கலம்காவல்
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் வரும் இவரை மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு 50 ஆண்டுகளைக் கடந்தும் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் தற்போது உள்ள நடிகர்களுக்கும் நடிப்பில் டஃப் கொடுத்து வருகிறார். சுமார் 70 வயதைக் கடந்தும் தனது நடிப்பில் கலக்கி வருகிறார் நடிகர் மம்முட்டி. இந்த நிலையில் இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து நடிகர் மம்முட்டி நடிப்பில் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இவரது நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் டாம்னிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ், பசூகா ஆகிய படங்கள் இதுவரை வெளியாகி உள்ளது.
இந்த இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஆண்டிலே நடிகர் மம்முட்டியின் நடிப்பில் மூன்றாவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தான் கலம்காவல். இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
மம்முட்டியின் மாஸ் நடிப்பில் வெளியானது கலம்காவல் ட்ரெய்லர்:
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நடிகர் விநாயகன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜிபின் கோபிநாத், ரஜிஷா விஜயன், காயத்ரி அருண், அரவிந்த் எஸ் கே, அஸீஸ் நெடுமங்காடு, ஸ்ருதி ராமச்சந்திரன், ஆர்ஜே சூரஜ், ஹரிசங்கர் எஸ்.ஜி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. படம் வருகின்ற 27-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… சின்ன வயசு க்ரஷ் யார்? ரசிகரின் கேள்விக்கு நடிகை ராஷ்மிகா ஓபன் டாக்
கலம்காவல் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Every shadow hides a story and every story hides a suspect 🔥#Kalamkaval Official Trailer Out Now.
Watch Trailer: https://t.co/4r9uljxkD0#Mammootty #Vinayakan #MammoottyKampany #JithinKJose #WayfarerFilms #TruthGlobalFilms pic.twitter.com/2rINHVjQgb
— MammoottyKampany (@MKampanyOffl) November 13, 2025
Also Read… இயக்குநர் மகிழ் திருமேனி அடுத்து இயக்க போவது இவரா? வைரலாகும் தகவல்