ரன்பீர் – சாய் பல்லவியின் ராமாயணா படத்தை புகழ்ந்த பிரபலம்!

Ramayana Movie: நடிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி ராமர் மற்றும் சீதா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் படம் ராமாயணா. இந்தப் படத்தைப் பற்றி மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சமீபத்தில் தெரிவித்த கருத்து தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

ரன்பீர் - சாய் பல்லவியின் ராமாயணா படத்தை புகழ்ந்த பிரபலம்!

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ரன்பீர் கபூர், சாய் பல்லவி

Published: 

04 May 2025 21:50 PM

கடந்த 1999-ம் ஆண்டு இயக்குநராக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் ரன்பீர கபூர் (Ranbir Kapoor). இவர் 2007-ம் ஆண்டு வெளியான சாவரியா என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயனகான அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார் நடிகர் ரன்பீர் கபூர். இறுதியா நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் அனிமல். இந்தப் படத்தை இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா (Sandeep Reddy Vanga) இயக்கி இருந்தார். இதில் நடிகர் ரன்பீர் கபூரின் ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ட்ரிப்டி டிம்ரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படம் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி திரயரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் படத்திற்கு இசையமைத்திருந்தார். பிரபல தயாரிப்பு நிறுவனமான டி சீரிஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்த நிலையில் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் ஆல்ஃபா மேனாக நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து ஆல்ஃபா நபர்கள் குறித்த பல விவாதங்களும் சமூகத்தில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரன்பீர் கபூர் இயக்குநர் நித்தீஸ் திவாரியுடன் கூட்டணி வைத்தார். ராமாயாணா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் ரன்பூர் கபூர் ராமராகவும் நடிகை சாய் பல்லவி சீதையாகவும் நடிகர் யாஷ் ராவணனாகவும் நடித்து வருகின்றனர். தற்போது படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் 2026-ம் ஆண்டும் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டும் வெளியாகும் என்று படக்குழு முன்னதாக அறிவிப்பை வெளியிட்டது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலகி வருகின்றது.

இந்த நிலையில் இந்தப் படம் குறித்து மகாராஷ்டிராவின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது. அதன்படி மகாராஷ்டிரா முதல்வர் எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவிடம் பேசியபோது, ​​நீங்கள் உருவாக்கும் ராமாயணா படத்தின் தரத்தைக் பார்த்து நான் வியந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றைய தலைமுறையினருக்கு நமது முந்தைய கதைகளைச் சொல்ல வேண்டிய வழி சினிமா தான் என்று நான் நினைக்கிறேன் என்றும் முதல்வர் பேசியுள்ளார். மேலும் நீங்கள் எடுக்கும் இந்த ராமாயணா படம் உலகிலேயே சிறந்ததாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் முதல்வர் தெரிவித்ததாக நமித் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இதனை அவர் Waves 2025 நிகழ்ச்சியில் பேசியது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Ajith Kumar : சூப்பர் ஹிட்.. 25 நாட்களில் கோடிக்கணக்கில் வசூலைக் குவித்த அஜித்தின் குட் பேட் அக்லி!
Cinema Rewind : பருத்திவீரன் படத்தில் அந்த சீன் எடுக்கும்போது நானும் கார்த்தியும் பட்டினியா கிடந்தோம்.. நடிகை பிரியாமணி பகிர்ந்த விஷயம்!
STR 49 : மீண்டும் இணைந்த சிம்பு – சந்தானம் காமினேஷன்.. ‘STR 49’ படப்பிடிப்பு பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு!
Karthik Subbaraj : ரெட்ரோவில் ‘ஸ்ரேயாவின் டான்ஸ்’ வைத்ததற்குக் காரணம் இதுதான்.. ஓபனாக பேசிய கார்த்திக் சுப்பராஜ்!
Kayadu Lohar : ரொம்ப நல்ல பொண்ணுங்க நானு.. ராஷ்மிகாவை போல மேடையில் பேசிய கயாடு லோஹர்!
அந்த மாதிரி படங்களை தவிர்பதற்கு காரணம் இது தான் – நடிகர் மாதவன் ஓபன் டாக்