இது இளம் ஹீரோக்களின் தீபாவளி.. ஒரே நாளில் வெளியாகும் டாப் 5 படங்கள்.. என்னென்ன தெரியுமா?

2025 Diwali Release Tamil Movie: பொதுவாக தீபாவளி என்றாலே, பட்டாசுக்கு அடுத்து சினிமாதான். அந்த வகையில் எப்போதும் தீபாவளி அன்று பிரம்மாண்ட நடிகர்களில் படங்கள் திரையரங்குகளில் வெளியாகும். இந்த ஆண்டு தீபாவளிக்கு இளம் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகிறது. இதுகுறித்து பார்க்கலாம்.

இது இளம் ஹீரோக்களின் தீபாவளி.. ஒரே நாளில் வெளியாகும் டாப் 5 படங்கள்.. என்னென்ன தெரியுமா?

2025 தீபாவளிக்கு வெளியாகும் தமிழ் திரைப்படம்

Published: 

14 Oct 2025 18:57 PM

 IST

இந்த 2025ம் ஆண்டு தீபாவளியில் இளம் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகிறது. அந்த வகையில் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் படம்தான் டியூட் (Dude). நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நடிப்பிலும், அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரனின் இயக்கத்திலும் தயாராகியுள்ள படம்தான் டியூட். இந்த படத்தை பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இளம் இசையமைப்பாளர் பிரதீப் ரங்கநாதன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) இணைந்து நடித்துள்ளார். இந்த படமானது காதல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது.

இதில் சரத்குமார் மற்றும் ரோகிணி இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்த படமானது தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் நிலையில், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.

டியூட் படக்குழு வெளியிட்ட ட்ரெய்லர் பதிவு :

ஹரிஷ் கல்யாணின் டீசல் திரைப்படம்

பிரபல நடிகராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவரின் முன்னணி நடிப்பில் அதிரடி ஆக்ஷ்ன் கதையில் தயாராகியுள்ள திரைப்படம்தான் டீசல் (Diesel). இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை அதுல்யா ரவி நடித்துள்ளார். இந்த டீசல் திரைப்படமானது கச்சா எண்ணெய் கடத்தல் தொடர்பான கதைக்களத்தில் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தின் விநியோக உரிமையை தட்டித்தூக்கிய பிரபல நிறுவனம் – வைரலாகும் தகவல்

இந்த படம் தான் ஹரிஷ் கல்யாண் நடித்ததில் அதிக பட்ஜெட் கொண்ட படம் என அவரே ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டான நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படமும் 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதியில் வெளியாகிறது.

துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரமின் முன்னணி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம்தான் பைசன் (Bison). இந்த படத்தில் துருவ் விக்ரம் கடந்த 2022ம் ஆண்டில் ஒப்பந்தமான நிலையில், கிட்டத்தட்ட 3 வருடகாலமாக இப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகிவந்துள்ளது.

இதையும் படிங்க: விக்ரம் சார் என்னிடம் சொன்ன விஷயம்… அவரின் நம்பிக்கையை காப்பாற்றிவிட்டேன் – மாரி செல்வராஜ் பேச்சு!

இதில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படமானது தென் மாவட்டத்தை சேர்ந்த உண்மையான கபடி வீரனின் கதையில் உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

பைசன் திரைபடக்குழு வெளியிட்ட ட்ரெய்லர் பதிவு :

கம்பி கட்டுன கதை திரைப்படம்

நடிகர் நட்டி சுப்ரமணியன் முன்னணி நடிப்பில் தயாராகியுள்ள படம் கம்பி கட்டுன கதை (Kambi Katna Katha). இப்படத்தை ராஜநாதன் பெரியசாமி இயக்கியுள்ளார். இதில் நடிகர் சிங்கம்புலி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது கிரைம் திரில்லர் தொடர்பான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படமும் தீபாவளியை முன்னிட்டு 2025 அக்டோபர் 17 அன்று வெளியாகிறது.

கார்மேனி செல்வம் திரைப்படம் :

இயக்குநர்களும் நடிகருமான சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனின் கூட்டணியில் தயாராகியுள்ளாள் படம்தான் கார்மேனி செல்வம் (Carmeni selvam). இப்படத்தை ராம் சக்ரி இயக்கியுள்ளார். இந்த படமானது ஒரு காரை அடிப்படையாக கொண்டு எமோஷனல், நகைச்சுவை போன்ற கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படமும் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.