Krithi Sanon: தேரே இஷ்க் மே படம் என்னை மிகவும் பாதித்தது… நடிகை கிரித்தி சனோன் பகிர்ந்த விஷயம்!

Kriti Sanon About Tere Ishq Mein: பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவருபவர்தான் கிரித்தி சனோன். இவர் நடிகர் தனுஷுடன் தேரே இஷ்க் மே என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த படமானது விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த அவர், இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி அவரை மிகவும் பாதித்தாக தெரிவித்துள்ளார்.

Krithi Sanon: தேரே இஷ்க் மே படம் என்னை மிகவும் பாதித்தது... நடிகை கிரித்தி சனோன் பகிர்ந்த விஷயம்!

கிரித்தி சனோன் மற்றும் தனுஷ்

Published: 

25 Nov 2025 16:30 PM

 IST

பான் இந்திய நடிகைகளில் ஒருவராக வளம்பெறுபவர் நடிகை கிரித்தி சனோன் (Krithi Sanon). இவர் இந்தி சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein). இந்த படத்தில் நடிகர் தனுஷ் (Dhanush) கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். இந்த படத்தை அம்பிகாபதி மற்றும் கலாட்டா கல்யாணம் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் எல். ராய் (Anand L Rai) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் தனுஷ் 3வது முறையாக படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் நடிகை கிரித்தி சனோன் வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் வரும் 2025 நவம்பர் 28ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கிரித்தி சனோன், இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி தன்னை பாதித்ததாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வெளியீட்டிற்கு 50 நாட்களே உள்ள பராசக்தி படம்… புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

தேரே இஷ்க் மே திரைப்படம் குறித்து நடிகை கிரித்தி சனோன் பகிர்ந்த விஷயம் :

அந்த நிகழ்ச்சியில் பேசிய கிரித்தி சனோன், அதில் “இந்த தேரே இஷ்க் மே திரைப்படம், எனது கெரியரில் அதிகம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதித்த திரைப்படம். இப்படத்தில் எனது கதாபாத்திரம் உணர்ச்சி ரீதியாக ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிங்க: நான் எப்போது புத்துணர்ச்சியாக இருக்க.. காலையில் எழுந்தவுடன் இதை மறக்காமல் செய்வேன்- சமந்தா கொடுத்த டிப்ஸ்

மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து வாரக்கணக்கான போதும் அந்த பாதிப்பு என்னைவிட்டு நீங்கவில்லை” என்று அவர் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

தேரே இஷ்க் மே திரைப்படம் குறித்து நடிகை கிரித்தி சனோன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த தேரே இஷ்க் மே திரைப்படமானது ஒரு காதல் சார்ந்த ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் தனுஷ் விமான படை அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இந்த படமானது சுமார் ரூ 200 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக கூறப்படும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் பெரும் வரவேற்பை பெற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories
இந்திய கிரிக்கெட் வீராங்கனை வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான ஷாபாஷ் மித்து – எந்த ஓடிடியில் பார்க்கலாம்
ஸ்கூல் யூனிஃபார்மில் இருக்கும் இந்த சிறுமி இப்போ ஸ்டார் நடிகை… யார் தெரியுமா?
Krithi Shetty: பிரதீப் ரங்கநாதன் கூட இருந்தாலே பாசிட்டிவ் வைப்தான் – கீர்த்தி ஷெட்டி ஓபன் டாக்!
Krithi Shetty: நான் கார்த்தி சாரின் மிகப்பெரிய ரசிகை.. அந்த படத்தை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன் – கீர்த்தி ஷெட்டி!
உனக்கென மட்டும் வாழும் இதயமடி… 14 ஆண்டுகளை நிறைவு செய்தது மயக்கம் என்ன படம்
மகாநதி படத்திற்கு பின் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.. 6 மாதம் சும்மாதான் இருந்தேன்- கீர்த்தி சுரேஷ்பேச்சு!
பெங்களூரு ஏ.டி.எம் கொள்ளை சம்பவம்.. வெளியான திடுக் தகவல்..
கோல்ஃப் உலகையே ஆச்சரியப்பட வைத்த பெண்ணின் வெற்றி - அப்படி என்ன நடந்தது?
பெண்கள் பெண்களை காக்கும் அதிசய சக்தி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் ரஷ்மிகா மந்தனா!
துபாய் ஏர்ஷோவில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானம்.. காரணத்தை சொன்ன நிபுணர்கள்..