Peddi: ராம் சரணின் ‘பெடி’ படத்தில் ஸ்பெஷல் பாடலில் நடனமாடும் கோலிவுட் நாயகி!

Peddi Movie Special Song: தெலுங்கு சினிமாவில் லீட் நாயகனாக அனைவரையும் கவர்ந்துவருபவர் ராம் சரண். இவரின் நடிப்பில் பெடி என்ற படமானது பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இந்த படத்தில் சிறப்பு பாடல் ஒன்றில் நடிகை ஸ்ருதிஹாசன் நடனமாடுவதாக கூறியிருந்த நிலையில், பாடல் தொடர்பான வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.

Peddi: ராம் சரணின் பெடி படத்தில் ஸ்பெஷல் பாடலில் நடனமாடும் கோலிவுட் நாயகி!

ராம் சரண் மற்றும் ஸ்ருதி ஹாசன்

Updated On: 

28 Apr 2026 17:56 PM

 IST

தென்னிந்த்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் ராம் சரண் (Ram Charan). இவரின் நடிப்பில் மிகவும் சிறப்பாக தயாராகிவரும் திரைப்படம்தான் பெடி (Peddi). இந்த படத்தினை இயக்குநர் புச்சி பாபு சனா (Buchi Babu Sana) இயக்க, ஐவிஒய் என்டேர்டைமென்ட் நிறுவனம் இணைந்து த்யாரித்துவருகிறது. இதில் நடிகர் ராம் சரண் லீட் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor) நடித்துள்ளார். மேலும் இதில் சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, சத்யா, ஜான் விஜய் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (AR Rahman) இசையமைத்துள்ள நிலையில், இதன் முதல் பாடலானது கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நடைபெற்றுவருகிறது.

அந்த வகையில் இப்படத்தில் சிறப்பு பாடல் ஒன்றில், பிரபல நடிகை ஒருவர் நடனமாடுவதாக கூறபட்டுவந்தது. அது வேறுயாருமில்லை ஸ்ருதிஹாசன்தான் (Shruti Haasan). இவர் சிறப்பு பாடலில் நடனமாடுவதாக கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் பாடலின் ஷூட்டிங் வீடியோ இணையத்தில் கசிந்திருந்தது. இதுகுறித்து படக்குழு எச்சரிக்கை கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நானி ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. ‘தி பாரடைஸ்’ படத்தின் நெக்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?

பெடி திரைப்படத்தின் ஸ்ருதிஹாசன் சிறப்பு பாடலில் நடனமாடுவதுகுறித்த எக்ஸ் பதிவு:

இந்த பெடி திரைப்படத்தில், நடிகர் ராம் சரண் பைல்வானாக நடித்துள்ளார். இப்படமானது முழுக்க கிராமத்து சண்டை காட்சிகள் மற்றும் பைல்வான் போட்டி போன்ற கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதற்காக நடிகர் ராம் சரண் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கும் மேலாக, பயிற்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இப்படத்தை கடந்த 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில், ஷூட்டிங் இன்னும் நிறைவடையாத காரணத்தால் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்து.

இதையும் படிங்க: பிரபல மலையாள நடிகரின் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளாரா அஜித் குமார்? வைரலாகும் தகவல்

அதன்படியாக இப்படம் 2026 ஜூன் மாதத்தில் வெளியிடுவதாக கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் அண்மையில், தனுஷின் கர படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, இயக்குநர் புச்சி பாபு சனா, அதில் பெடி படம் வரும் 2026 ஜூன் 25ம் தேதியில் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார். இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் ஒருமாதம் மட்டுமே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
Karuppa: அய்யா கருப்பனே வாருமையா…. அதிரடி இசையில் வெளியானது கருப்பு படத்தின் கருப்பா கூட வா பாடல்!
4 ஆண்டுகளைக் கடந்தது பிரித்விராஜ் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஜன கண மன படம்!
தேர்வு உன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்போது, ​​தேர்வை யார் தீர்மானிக்கிறார்கள்? அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது எக்ஸாம் இணையதள தொடர்!
Samantha: அவள் உலக அழகியே.. ரசிகர்களுடன் தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய சமந்தா – வைரலாகும் போட்டோஸ்!
பர்த்டே ஸ்பெஷல்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே!
பேசில் ஜோசஃப் – அல்லு அர்ஜுனின் படம் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..