கார் பறிமுதல் வழக்கில் துல்கர் சல்மானின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

Actor Dulquer Salmaan: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். சமீபத்தில் இவரது வீட்டில் நடைப்பெற்ற சுங்கத் துறை சோதனையில் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கார் பறிமுதல் வழக்கில் துல்கர் சல்மானின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

துல்கர் சல்மான்

Published: 

07 Oct 2025 19:19 PM

 IST

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவர் வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தனது திறமையான நடிப்பின் காரணமாக மலையாள சினிமா மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் எந்த மொழியில் படம் வெளியானாலும் அது பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் என வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இவர் இறுதியாக நடித்து திரையரங்குகளில் வெளியான லக்கி பாஸ்கர் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தெலுங்கு மொழியில் வெளியான இந்தப் படம் பான் இந்திய அளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதேபோல துல்கர் சல்மானின் தயாரிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் லோகா. இந்தப் படம் ரூபாய் 30 கோடி பட்ஜெட்டில் உருவாகி தற்போது ரூபாய் 300 கோடிகள் வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் இண்டர்ஸ்டியல் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தயாரிப்பு நடிப்பு என ஹிட் கொடுத்து வரும் துல்கர் சல்மானுக்கு அவரது கார்கள் மூலம் ஒரு சிக்கல் ஏற்பட்டது.

Also Read… பிக்பாஸில் வாட்டர்மெலன் திவாகர் சொன்ன விசயம் – கடுப்பான போட்டியாளர்கள்

துல்கர் சல்மானின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்:

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டவிரோதமாக கேரளாவில் இறக்குமதி செய்யப்பட்ட பிரீமியம் வாகனங்கள் மீது சுங்கதுறை நடவடிக்கை எழுத்து வந்தது. சுமார் 30 இடங்களுக்கு மேல் வாகன பரிசோதனையில் ஈடுபட்ட சுங்கதுறையினர் சட்டவிரோதமாக வாங்கிய கார்களை பறிமுதல் செய்தது.

இதனைத் தொடர்ந்து ஆவணங்களை சரிபார்த்து பிரச்னைகள் இல்லாத கார்களை விடிவித்தது சுங்கத்துறை. ஆனால் துல்கர் சல்மானிகள் கார்கள் விடுவிக்கப்படாத காரணத்தால் அதனை விடுவிக்கக்கோரி துல்கர் சல்மான் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துல்கர் சல்மானின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட 39 கார்களில் 33 கார்கள் விடுவிக்கப்பட்டதாகவும் விசாரணை நிலுவையில் உள்ளதால் துல்கர் சல்மானின் கார்களை விடுவிக்கவில்லை என்றும் சுங்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… அந்த படத்தை நான் இயக்கவில்லை… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதீப் ரங்கநாதன்!

பெங்களூரு ஏ.டி.எம் கொள்ளை சம்பவம்.. வெளியான திடுக் தகவல்..
கோல்ஃப் உலகையே ஆச்சரியப்பட வைத்த பெண்ணின் வெற்றி - அப்படி என்ன நடந்தது?
பெண்கள் பெண்களை காக்கும் அதிசய சக்தி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் ரஷ்மிகா மந்தனா!
துபாய் ஏர்ஷோவில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானம்.. காரணத்தை சொன்ன நிபுணர்கள்..