Mammooty: யூத் பட வெற்றியை பாராட்டிய மம்முட்டி.. நெகிழ்ச்சியில் கென் கருணாஸ்!
Mammootty Praises Youth Movie: சினிமாவில் துணை வேடங்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வந்தவர் கென் கருணாஸ். இவர் இயக்குநராகவும்,நாயகனாகவும் அறிமுகமாகியிருந்த படம்தான் யூத். இப்படத்தையும், கென் கருணாஸையும் மம்முட்டி பாராட்டி பேசியுள்ளார். அதை தனது எக்ஸ் பக்கத்தில் கென் கருணாஸ் பகிர்ந்துள்ளார்.

மம்முட்டி மற்றும் கென் கருணாஸ்
தற்போது கோலிவுட் சினிமாவில் பல இளம் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு சினிமாவில் நுழையும் வாய்ப்புகள் கிடைத்துவருகிறது. அந்த வகையில் தனது சிறுவயதிலிருந்து, சினிமாவில் நடிகராக படங்களில் நடித்துவந்தவர் கென் கருணாஸ் (Ken Karunaas). இவர் குழந்தை நட்சத்திரமாகவும், சிறப்பு கதாபாத்திரங்களிலும் படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran), தனுஷ் (Dhanush) போன்ற பல்வேறு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் வெறும் நடிகராக மட்டுமில்லாம, உதவி இயக்குநராகவும் தனுஷின் படங்களில் பணியற்றியுள்ளார். அந்த வகையில், இவரே இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமாகியிருந்த படம்தான் யூத் (Youth). இப்படமானது கடந்த மார்ச் 19ம் தேதியில் வெளியாகியிருந்த நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
அந்த வகையில் இப்படத்தை பல்வேறு உச்ச நடிகர்கள் மற்றும் இயக்குநர்களும் பாராட்டி பதிவை வெளியிட்டிருந்தனர். இந்த வரிசையில் மலையாள உச்ச நாயகன் மம்முட்டி (Mammootty), இப்படத்தையும், வெற்றியையும் குறித்து பாராட்டி பேசியுள்ளார். இது குறித்த பதிவை கென் கருணாஸ், தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? அப்டேட் இதோ!
யூத் படத்தை மம்முட்டி பாராட்டி பேசியது தொடர்பாக கென் கருணாஸ் பகிர்ந்த பதிவு:
❤️❤️❤️❤️❤️ https://t.co/9sW9XsXGYN
— Ken Karunaas (@KenKarunaas) April 24, 2026
பேட்ரியாட் பட செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய மம்முட்டி, சமீபத்தில் யூத் பட வெற்றிவிழாவை பார்த்ததாகவும், அதில் இளம் நடிகர் குறித்து கூர்ந்திருந்தார். “அந்த இளம் நடிகரின் உற்சாகம், ஆர்வம் மற்றும் வேட்கை ஆகியவை இன்றும் என்னுள் உள்ளன” என்றும் அதில் மம்முட்டி தெரிவித்திருந்தார். இதை வெளிப்படுத்தும் விதத்தில், கென் கருணாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் மம்முட்டி பேசிய வீடியோவை பகிர்ந்து, அதற்கு நெகிழ்ச்சியான விதத்தில் கமெண்டும் செய்துள்ளார். தற்போது இதுகுறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க : அஜித் – ஷாலினி திருமண நாள் விழாவில் கலந்துகொண்ட இயக்குநர்கள்… வைரலாகும் புகைப்படம்
கடந்த 2026 மார்ச் 19ம் தேதியில் யூத் படமானது திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இப்பட வெளியான சமயத்தில் தமிழில் எந்த பெரிய படங்களும் வெளியாகவில்லை. அந்த வகையில் பள்ளிப்பருவ காதல் மற்றும் அம்மா அப்பா எமோஷனல் மற்றும் மிடில்கிளாஸ் குடும்பத்தின் கதை என அனைவரையும் கவரும் விதத்தில் இந்த படமானது அமைந்திருந்தது. திரையரங்குகளில் கிட்டத்தட்ட ரூ 80 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இதையடுத்து தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படுகிறது.