Youth Movie: டாக்சிக் – துரந்தர் 2 படங்களுடன் மோதும் கென் கருணாஸின் ‘யூத்’ படம் – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Ken Karunas Youth Movie Release Date: தமிழில் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளவர் கென் கருணாஸ். இவரின் இயக்கத்திலும், நடிப்பிலும் உருவாகியுள்ள படம் யூத். இன்று காதலர் தின ஸ்பெஷலாக இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போது என விவரமாக பார்க்கலாம். \

Youth Movie: டாக்சிக் - துரந்தர் 2 படங்களுடன் மோதும் கென் கருணாஸின் யூத் படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கென் கருணாஸின் யூத் படம்

Updated On: 

14 Feb 2026 20:36 PM

 IST

கோலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்தவர் கென் கருணாஸ் (Ken Karunas). இவர் “அழகு குட்டி செல்லம்” என்ற படத்தில், நகைச்சுவை வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். பின் தொடர்ந்து தனுஷின் (Dhanush) வாத்தி (vaathi) மற்றும் அசுரன் (Asuran) போன்ற படங்களில் இவரின் நடிப்பு மக்கள் மத்தியில் புகழப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்துவந்தார். மேலும் தனுஷின் படங்களில் உதவி இயக்குநராகவும் இவர் பணியாற்றியுள்ளாராம். இதை தொடர்ந்து, இவரே கதாநாயகனாகவும், இயக்குநராகவும் புது படத்தை உருவாக்கியுள்ளார். அந்த திரைப்படம்தான் “யூத்” (Youth). இப்படத்தை கேன்ஸ் கருணாஸ் இயக்க, பர்வதா என்டேர்டைமென்ட் நிறுவனமானது தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்திருந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் “முட்ட கலக்கி” வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்நிலையில் இன்று 2026 பிப்ரவரி 14ம் தேதியில் காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இப்படம் வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியாகவுள்ளதாம். இப்படத்தின் ரிலீஸின்போதுதான் பான் இந்திய திரைப்படங்களான, டாக்சிக் (Toxic) மற்றும் துரந்தர் 2 : தி ரிவென்ஜ் (Dhurandhar 2: The Revenge) போன்ற படங்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாம்பு சட்டை படத்திற்கு மாநில விருதை வென்ற கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் எக்ஸ் போஸ்ட்!

கென் கருணாஸின் யூத் திரைப்பட ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

இந்த யூத் படமானது பள்ளிப்பருவ காதல், எமோஷனல் மற்றும் வீட்டு சூழ்நிலை போன்ற கதைக்களத்தில் தயாராகியுள்ளதாம். இப்படத்தில் கென் கருணாஸ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கிட்டத்தட்ட 3 நடிகைகள் நடித்துள்ளனர். அதில் சிறை திரைப்படத்தில் நடித்த நடிகை அனிஷிமா அனில்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் கென் கருணாஸின் தந்தை தாயாக, சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் பிரியதர்ஷினி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: அனிருத்தின் காதலர் தின ட்ரீட்.. 11 வருடங்களுக்கு பின் வந்த ‘எனக்கென யாரும் இல்லையே’ பாடல்!

இந்த படமானது கலக்கல் காமெடி கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், 2026 மார்ச் மத்தில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்திருந்தது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை காதலர் தினச் சிறப்பாக வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் இப்படம் உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories
பல தடைகளையும் தாண்டி தனது வாழ்க்கையில் முக்கியமான விஷயத்தை செய்த நாஞ்சில் விஜயன் – வைரலாகும் வீடியோ!
பாம்பு சட்டை படத்திற்கு மாநில விருதை வென்ற கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் எக்ஸ் போஸ்ட்!
LIK Movie: அனிருத்தின் காதலர் தின ட்ரீட்.. 11 வருடங்களுக்கு பின் வந்த ‘எனக்கென யாரும் இல்லையே’ பாடல்!
கேரியரின் உச்சத்தை விட்டு வந்தாலும்… உதயநிதி பேச்சால் சர்ச்சை – என்ன நடந்தது?
ஒன்று சேர்ந்தால் மட்டும்தான் காதலா? மலையாள சினிமாவில் இந்த அழகான சூஃபியும் சுஜாதாயும் படத்தை பார்க்க தவறாதீர்கள்!
சிவகார்த்திகேயன் – சிவகுமார் முருகேசனின் பட அறிவிப்பு எப்போது? – சர்ப்ரைஸாக வெளியான வீடியோ
ஆன்லைனில் கேம் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு - என்ன நடந்தது?
இந்தியாவின் முதல் இசைச் சாலை.. 70-80 கி.மீ. வேகத்தில் சென்றால் ‘ஜெய் ஹோ’ இசைக்கும்!
செயற்கை நுண்ணறிவு துறையில் 100 ஆண்டு கால பத்திரங்களை வெளியிட்ட ஆல்பபெட்
பீகாரில் இளைஞரை கடத்தி கட்டாய திருமணம் - பரபரப்பு தகவல்