யூத் படத்திற்காக ஜிவி பிரகாஷ் செய்த செயல் – நெகிழ்ந்து பேசிய கென் கருணாஸ்

GV Prakash did a youth movie without any salary: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தற்போது கென் கருணாஸ் எழுதி இயக்கி நடித்துள்ள யூத் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்காக அவர் செய்த செயல் குறித்து கென் கருணாஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

யூத் படத்திற்காக ஜிவி பிரகாஷ் செய்த செயல் - நெகிழ்ந்து பேசிய கென் கருணாஸ்

கென் கருணாஸ் - ஜிவி பிரகாஷ்

Published: 

25 Feb 2026 16:27 PM

 IST

தமிழ் சினிமாவில் பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களில் நடித்து பிறகு காமெடி நடிகராக பிரபலமாகி தொடர்ந்து நாயகனாகவும் சிலப் படங்களில் நடித்தவர் கருணாஸ். இவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான நந்தா என்ற படத்தில் லொடுக்குப்பாண்டி என்ற கதாப்பாத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்த கதாப்பாத்திரத்தில் பெயரை வைத்தே பல ஆண்டுகளுக்கு மக்கள் அவரை அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து காமெடியனாக பலப் படங்களில் நடித்து வந்த அவர் தமிழ் சினிமாவில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். இப்படி இருக்கும் சூழலில் அவரது மகன் கென் கருணாஸ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது தானே படத்தை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக பலப் படங்களில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து நாயகனின் மகன் அல்லது முக்கிய வேடத்தில் நடித்து வந்த கென் கருணாஸ் தற்போது யூத் என்ற படத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் இவர் இயக்குநராக மட்டும் இன்றி கதையின் நாயகனாகவும் அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கென் கருணாஸின் அம்மா அப்பாவாக நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமுடு மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் அவரைக் குறித்து கென் கருணாஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது வைரலாகி வருகின்றது.

யூத் படத்திற்காக ஜிவி பிரகாஷ் சம்பளமே வாங்கவில்லை:

அதன்படி கென் கருணாஸ் சமீபத்திய பேட்டியில் பேசியதாவது, ஜி.வி.பிரகாஷ் அண்ணா எனக்காக சம்பளம் வாங்காம யூத் படத்தில் பணியாற்றினார். அந்தப் படத்துக்கு ஒரு பெரிய இசையமைப்பாளர் தேவைப்பட்டார். என் படம் தொடர்பான ஐடியாவில் யாருக்கும் நம்பிக்கை இல்லைன்னு ஜி.வி.பிரகாஷ் அண்ணாகிட்ட நான் விளக்கினேன். அவர் ஸ்கிரிப்டைக் கேட்டு, என்னை நம்பி இசையமைத்தார். பல தயாரிப்பாளர்கள் கூட ஸ்கிரிப்டைக் கேட்டாங்க, அதைத் தயாரிக்கத் தயாராக இல்லை. நான் என் அப்பாவுக்கு போன் பண்ணேன், அவர்தான் நம்பிக்கை கொடுத்தார் என்றும் கென் கருணாஸ் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… 5 மில்லியன் பார்வைகளைக் கடந்தது எனக்கென யாரும் இல்லையே பாடல் வீடியோ

இணையத்தில் வைரலாகும் கென் கருணாஸ் பேச்சு:

Also Read… Made in Korea Movie: பிரியங்கா மோகனின் ‘மேட் இன் கொரியா’ படம் எப்போது ரிலீஸ்? – வெளியான அறிவிப்பு இதோ!

Follow Us
நாய் நக்கிய காயம்: செப்சிஸால் நான்கு உறுப்புகள் துண்டிப்பு – அதிர்ச்சி சம்பவம்
பழைய ஸ்மார்ட்போனில் ஒளிந்திருக்கும் அரிய பொக்கிஷம்.. இந்தியாவின் 'அணு இறையாண்மைக்கு' உதவும் இ-கழிவு மறுசுழற்சி!
கொள்ளையர்களை விரட்டிய என்.ஆர்.ஐ பெண் – லூதியானாவில் பரபரப்பு சம்பவம்
"ரியல் கேரளா ஸ்டோரி".. 2 வாரங்களாக மெட்ரோ தூணில் தவித்த பூனை பத்திரமாக மீட்பு!