Revolver Rita: ஒரு டார்க் காமெடி கதையில்… கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படம் எப்படி இருக்கு?
Revolver Rita Movie Review: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பில் இன்று 2025 நவம்பர் 28ம் தேதியில் வெளியான படம்தான் ரிவால்வர் ரீட்டா. இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகிவரும் நிலையில், ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படம்
நடிகை கீர்த்தி சுரேஷின் (Keerthy Suresh) நடிப்பில் சுமார் 1 வருடத்திற்கு பின் தமிழில் வெளியாகியுள்ள படம்தான் ரிவால்வர் ரீட்டா (Revolver Rita). இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ஜே.கே.சந்துரு (JK.Chandru) இயக்க, பேஷன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுடன் நடிகர்கள் ராதிகா சரத்குமார் (Rathika sarathkumar), சுனில் ரெட்டி (Sunil Reddy) , ரெட்டின் கிங்ஸ்லி (Reddin Kingsley), சென்ட்ராயன் மற்றும் ஜான் விஜய் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது ஒருநாளில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது. இந்த படமானது முழுக்க டார்க் காமெடி கதைக்களத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று 2025 நவம்பர் 28ம் தேதியில் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துவரும் எக்ஸ் விமர்சனங்கள் என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: பிக் பாஸ் மியூசியம்.. மலரும் பழைய போட்டியாளர்களின் நினைவு.. வைரலாகும் ப்ரோமோ இதோ!
கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் தொடர்பான பதிவு:
.@KeerthyOfficial ‘s #RevolverRita is a quirky dark comedy when an all women family unexpectedly ruffles with two faction of gangsters, a corrupted cop only to avenge the death of their dear one from the past.
Keerthy has some well etched scenes especially the single take… pic.twitter.com/xh47Qtzr7j
— Rajasekar (@sekartweets) November 28, 2025
இந்த ரிவால்வர் ரீட்டா படமானது முழுக்க டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் நடிகை ராதிகா சரத்குமாரின் கதாபாத்திரமும் மிகவும் சிறப்பாகவே வந்துள்ளது. இந்த படத்தின் கதையானது கீர்த்தி சுரேஷின் குடும்பம் எதிர்பாராத விதமாக இரு ரௌடி கும்பலிடம் மாட்டிக்கொள்கிறது.
இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை எத்தனை கோடிக்கு விற்கப்பட்டுள்ளது தெரியுமா?
அதிலிருந்து அவர்கள் எவ்வாறு தப்பிக்கிறார்கள் என்பதுதான் மீதி கதை. மேலும் ஊழல் நிறைந்த போலீஸ்காரருடன் தனது காதலனின் மரணத்திற்கு பழிவாங்குவதற்காக கீர்த்தி சுரேஷ் போராடுவதாக இந்த கதை உருவாகியுள்ளது.
ரிவால்வர் ரீட்டா படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு எப்படி இருக்கிறது :
Had a real good fun watching #RevolverRita 🎉🥳. @KeerthyOfficial carried the film in her shoulders with her screen presence & Radhika mam nailed it with fantastic performance. When she says “Atha solren podunga maapla” Theater Erupts💥💥🤣🤣🤣. If you are a fan of Dark comedy.… pic.twitter.com/MuVxZYabgY
— Rathna kumar (@MrRathna) November 28, 2025
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கேரியரில் சிறப்பான நடிப்பை இப்படத்திற்கு வழங்கியுள்ளார். மேலும் அவரின் காமெடி டைமிங் இந்த படத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகிறதாம். அவரின் நடிப்பில் வெளியான இந்த ரிவால்வர் ரீட்டா படமானது ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு மற்றும் ஒரு வலுவான கதையம்சம் கொண்ட படமாக உள்ளது.
ரிவால்வர் ரீட்டா படத்தை திரையரங்குகள் சென்று பார்க்கலாமா:
Just stepped out of the #RevolverRita premiere and it’s absolute winner. @KeerthyOfficial delivers a career best performance and her comedy timing keeps the film engaging. She carried the film with confidence and delivering clear variations in performance that show how much… pic.twitter.com/TH7XlfhyxA
— Digi Star (@TheDigiStar) November 27, 2025
இந்த படமானது முழுக்க ஆக்ஷ்ன், டார்க் காமெடி மற்றும் சிறப்பான காட்சிகளுடன் வெளியாகியுள்ளது. இப்படம் முழுவதிலும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு சிறப்பாகவே உள்ளது. மேலும் ராதிகா சரத்குமாரின் நடிப்பும் சிறப்பாகவே அமைந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் வெளியான ஒரு டார்க் நகைச்சுவை நிறைந்த படமாக இது வெளியாகியுள்ளது. காமெடி படங்கள் பிடிக்கும் என்பவர்கள் நிச்சயமாக இப்படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாம்.