டார்க் காமெடியில் ஒரு ரிவெஞ்ச் ஸ்டோரி… கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Revolver Rita Movie Review: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் ரிவால்வர் ரீட்டா. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ரிவால்வர் ரீட்டா
தமிழ் சினிமாவில் கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ரிவால்வர் ரீட்டா. டார்க் காமெடி க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தினை இயக்குநர் ஜே.கே. சந்திரு எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்த ரிவால்வர் ரீட்டா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் ராதிகா சரத்குமார், சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ், சுரேஷ் சக்ரவர்த்தி, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, எம்.ஜே. ஸ்ரீராம், கல்யாண் மாஸ்டர், சென்ட்ராயன், கதிரவன், அகஸ்டின், ராமச்சந்திரன் துரைராஜ், பிளேட் சங்கர், வெற்றியாளர் ராமச்சந்திரன், புஜ்ஜி பாபு, காயத்ரி ஷான், அக்ஷதா அஜித், குஹாசினி, மஹிமா, நிஷா, குழந்தை சனா, குழந்தை ரயா மிருத்திகா, ராம் ராஜேந்திரன், சதீஷ் கண்ணன், குண பாபு, இந்திரஜித், சஞ்சீவி, அரவிந்த், பிரவீன், பாலாஜி சீனிவாசன், சசி, லோகன், பாலாஜி, பாலமுருகா டி. பாலா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் சார்பாக தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம்
ம்ற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ரிவால்வர் ரீட்டா படத்தின் கதை என்ன?
நடிகை கீர்த்தி சுரேஷ் பாண்டிச்சேரியில் ஒரு ஃப்ரைட் சிக்கன் ரெஸ்டாரண்டில் வேலை செய்கிறார். இவரது தந்தை சிறு வயதிலேயே தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்த காரணத்தால் அம்மா, அக்கா, தங்கை உடன் வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கு சூழலில் தனது அக்காவின் கணவர் வரதர்சனை குறைவாக இருப்பதால் மனைவி மற்றும் கைகுழந்தையை அம்மா வீட்டியேலே விட்டு விடுகிறார்.
இந்த நிலையில் தனது அக்காவின் குழந்தைக்கு முதல் பிறந்த நாள் கொண்டாட வீட்டில் ஏற்பாடு நடந்துகொண்டு இருக்கிறது. அப்போது பாண்டிச்சேரியிலேயே பிரபல தாதாவாக இருக்கும் சூப்பர் சுப்பராயன் விலை மாதுவின் வீட்டிற்கு செல்வதற்கு பதிலாக மாறி கீர்த்தி சுரேஷின் வீட்டிற்கு போதையில் சென்றுவிடுகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக வாக்குவாதம் முற்றி குக்கர் மூடியை வைத்து கீர்த்தியின் அம்மா ராதிகா அவரை அடித்தே கொலை செய்துவிடுகிறார். இந்த கொலையை எப்படி மறைக்கிறார்கள், அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே படத்தின் கதை. இந்த நிலையில் இந்த ரிவால்வர் ரீட்டா படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.