எனக்கு மிகவும் பிடித்த நடிகருடன் நடிச்சு இருக்கேன் – பள்ளிச்சட்டம்பி படம் குறித்து பேசிய கயாடு லோஹர்

Kayadu Lohar: கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் மராத்தி என தொடர்ந்து பல மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை கயாடு லோஹர். இவரது நட்டிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

எனக்கு மிகவும் பிடித்த நடிகருடன் நடிச்சு இருக்கேன் - பள்ளிச்சட்டம்பி படம் குறித்து பேசிய கயாடு லோஹர்

கயாடு லோஹர்

Published: 

29 Sep 2025 16:38 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 21-ம் தேதி பிப்ரவரி மாதம் 2025-ம் ஆண்டு வெளியான டிராகன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார் கயாடு லோஹர் (Actress Kayadu Lohar). இவர் கன்னட சினிமா மூலம் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தற்போது தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் மராத்தி மொழியிலும் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை கயாடு லோஹர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசியுள்ளார். அதில் முன்னதாக இவர் நடித்தப் படங்கள் பற்றியும் இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படங்கள் குறித்தும் நிறைய விசயங்களை விரிவாக பகிர்ந்துகொண்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அதில் அவர் ட்ராகன் படத்தில் நடித்த அனுபவத்தையும் அதனால் அவர் கற்றுக்கொண்ட சில விசயங்களையும் பேசியிருந்தார். பின்பு தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் இவரது நடிப்பில் உருவாகி வரும் படங்கள் குறித்து பல தகவல்களை வெளிப்படையாக பேசியுள்ளார். குறிப்பாக மலையாள சினிமாவில் நடித்து வரும் பள்ளிச்சட்டம்பி படம் குறித்து நிறைய தகவல்களை தெரிவித்துள்ளார்.

பள்ளிச்சட்டம்பி படத்தின் டொவினோ உடன் நடித்த அனுபவம்:

அதன்படி மலையாள சினிமாவில் நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் படம் பள்ளிச்சட்டம்பி. இந்தப் படத்தில் நடிகை கயாடு லோஹர் நாயகியாக நடித்துள்ளார். பீரியட் ட்ராமாவாக உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் டிஜோ ஜோஷ் ஆண்டனி இயக்கி வருகிறார். மேலும் இந்தப் படத்திற்கு திரைக்கதையை சுரேஷ் பாபு எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் குறித்து பேசிய நடிகை கயாடு லோஹர் எனக்கு மிகவும் பிடித்த டொவினோ தாமஸ் உடன் இந்தப் படத்தில் நடிச்சு இருக்கேன். மார்பக வரிக்கு எதிராகப் போராடிய ஒரு வரலாற்று கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். மலையாள ரசிகர்களை திருப்திப்படுத்துவது மிகவும் கடினம். நான் களரி கற்றுக்கொண்டேன், விரிவான பயிற்சி செய்து, அந்தக் கதாபாத்திரத்திற்காக வயிற்றுப் பகுதியை வளர்த்துக் கொண்டேன் என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Also Read… Sasikumar: யாத்திசை பட இயக்குநரின் படத்தில் சசிகுமார்.. வெளியான அப்டேட்!

இணையத்தில் கவனம் பெறும் நடிகை கயாடு லோஹரின் பேச்சு:

Also Read… Marshal: கார்த்தியின் மார்ஷல் படத்தின் கதை இதுவா? வைரலாகும் தகவல்!