Kayadu Lohar: கரூர் துயரம் குறித்து தனது பெயரில் போலி பதிவு.. விளக்கமளித்த கயாடு லோஹர்!

Kayadu Lohar Clarification X Post: தமிழ் சினிமாவில் நடித்த முதல் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கயாடு லோஹர். இவரின் கணக்கில் இருந்து நேற்று கரூரில் நடந்த துயர சம்பவம் பற்றித் பதிவுகள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அந்த கணக்கு போலியானது என நடிகை கயாடு லோஹர் விளக்கம் கொடுத்துள்ளார்.

Kayadu Lohar: கரூர் துயரம் குறித்து தனது பெயரில் போலி பதிவு.. விளக்கமளித்த கயாடு லோஹர்!

கரூர் துயரம் குறித்து கயாடு லோஹரின் பதிவு

Published: 

28 Sep 2025 18:45 PM

 IST

கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியான திரைப்படம்டிராகன் (Dragon). நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் வெளியான படம்தான் டிராகன். இந்தப் படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான நடிகையானவர் கயாடு லோஹர் (Kayadu Lohar). இவர் தற்போது தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்ககளில் தொடர்ந்து நடித்த வருகிறார். இந்நிலையில் நேற்று 2025 செப்டம்பர் 27ம் தேதியில் கரூரில் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) தமிழக வெற்றிக்கழகத்தின் ( Tamilaga Vettri Kazhagam) பிரச்சாரம் நடைபெற்றிருந்தது. இந்த பேரணியின்போது மூச்சுத்திணறி கிட்டத்தட்ட 40 பேர் பலியாகினர். இந்த சம்பவமானது ஒட்டுமொத்த இந்தியாவையும் கலங்கவைத்துள்ளது.

இந்த துயர சம்பவத்திற்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் கருத்துக்கதை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கயாடு லோஹர் எக்ஸ் பக்கத்தில் தளபதி விஜய் மற்றும் அவரின் கட்சி குறித்து அவதூறாக பேசியது போல பதிவு வெளியானது.

இதையும் படிங்க : மீசையமுறுக்கு 2வில் நடிக்க மறுத்த இசையமைப்பாளர்.. யார் தெரியுமா?

இந்நிலையில், அந்த பதிவானது போலியான கணக்கில் உள்ள பதிவு என்றும், கரூரில் எனக்கு தனிப்பட்ட நண்பர்கள் யாரும் இல்லை என நடிகை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார். மேலும் கரூர் பேரணியில் பலியானவர்களுக்கு தனது இரங்கலையும் கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.

கரூர் துயரம் குறித்து விளக்கமளித்து கயாடு லோஹர் வெளியிட்ட எக்ஸ் பதிவு

இந்த பதிவில் நடிகை கயாடு லோஹர், “எனது பெயரில் பதிவுகளைப் பரப்பும் ட்விட்டர் கணக்கு போலியானது. எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மேலும் அங்கு வெளியிடப்பட்ட அறிக்கைகள் என்னுடையவை இல்லை. கரூர் பேரணியில் நடந்த துயர சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன்.

இதையும் படிங்க : கரூரில் விஜயின் பரப்புரையில் நேர்ந்த சோகம் – வேதனை தெரிவிக்கும் நடிகர்கள்

மேலும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கரூரில் எனக்கு தனிப்பட்ட நண்பர்கள் யாரும் இல்லை என்பதையும், என் பெயரில் பரப்பப்படும் கதை தவறானது என்பதையும் நான் மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன்” என நடிகை கயாடு லோஹர் அந்த பதிவு தெரிவித்துள்ளார்.

கயாடு லோஹர் வெளியிட்டதாக குறித்து பரவி போலியான எக்ஸ் பதிவு :