Karthi: தந்தை சிவகுமாருக்கு டாக்டர் பட்டம்.. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கார்த்தி!

Karthi on Shivakumars Doctorate: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்தி. இவரின் தந்தையும் நடிகருமான சிவகுமாருக்கு சமீபத்தில், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் டாக்டர் பட்டம் வழங்கியிருந்தார். இந்நிலையில் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து, நடிகர் கார்த்தி தனது எக்ஸ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Karthi: தந்தை சிவகுமாருக்கு டாக்டர் பட்டம்.. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கார்த்தி!

சிவகுமார், மு.க.ஸ்டாலின் மற்றும் கார்த்தி

Published: 

29 Nov 2025 17:21 PM

 IST

நடிகர் கார்த்தி (Karthi) தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருகிறார். மேலும் இவர் தற்போது தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் வா வாத்தியார் (Vaa Vaathiyaar). இந்த படமானது எம்ஜிஆர் ரசிகர் தொடர்பான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படம் வரும் 2025 டிசம்பர் 5ம் தேதியில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் முடியவில்லை. இதன் காரணமாக இந்த படத்தின் ரிலிஸ் தேதி தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. மேலும் கார்த்தி மார்ஷல் (Marshal) என்ற படத்திலும் நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலை கழகத்தில் சார்பில் நடிகர் சிவகுமாருக்கு (Shivakumar) டாக்டர் பட்டம் (Doctorate) வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியானது நேற்று 2025 நவம்பர் 28ம் தேதியில் சென்னை கலைவாணர் அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK. Stalin) கலந்துகொண்டார். இவர் நடிகர் சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அஞ்சான் ரீ-ரிலீஸ் வெற்றிபெற்றால்.. அஞ்சான் 2 நிச்சயம்- இயக்குநர் லிங்குசாமி பேச்சு!

தந்தை சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து நடிகர் கார்த்தி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு :

இந்த பதிவில் நடிகர் கார்த்தி, தனது தந்தையும், நடிகருமான சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதையொட்டி நன்றி தெரிவித்துள்ளார். இந்த பதிவில், “கலை மற்றும் சமூகத்திற்கு என் தந்தை ஆற்றிய பங்களிப்பை பாராட்டி மற்றும் கௌரவ பட்டமான டாக்டர் பட்டம் வழங்கிய தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. மேலும் தமிழக அரசிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என அந்த பதிவில் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

கார்த்தியின் புதிய படம் :

நடிகர் கார்த்தி தற்போது மார்ஷல் திரைப்படத்தன் ஷூட்டிங்கில் பிசியாக இருந்துவருகிறார். இந்த படத்தை டாணாக்காரன் என்ற படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் நிலையில், ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துவருகிறது.

இதையும் படிங்க: தேரே இஸ்க் மெய்ன் படத்தின் வசூல் எவ்வளவு? அப்டேட் இதோ

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துவருகிறார். இப்படம் 1960ம் மாநாடுகளில் நடக்கும் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகிவரும் நிலையில், இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்தவருகிறார். இப்படம் வரும் 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories
ஆதார் அட்டைதாரர்களே.. இந்தத் தவறுகள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்.. அரசு எச்சரிக்கை!!
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!
"பாட்டி.. மொத்த சமோசாவும் காலி".. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!
‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..