Marshal: கார்த்தி-கல்யாணி பிரியதர்ஷன் காம்போ.. மார்ஷல் பட அப்டேட் இதோ!

Karthis Marshal Movie Shooting Pooja : நடிகர் கார்த்தியின் 29வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள திரைப்படம் மார்ஷல். இந்த படத்தை டாணாக்காரன் படம் மூலம் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குநருமான தமிழ் இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Marshal: கார்த்தி-கல்யாணி பிரியதர்ஷன் காம்போ.. மார்ஷல் பட  அப்டேட் இதோ!

மார்ஷல் பட பூஜை

Published: 

11 Jul 2025 13:06 PM

கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கார்த்தி (Karthi). இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மெய்யழகன் (Meiyazhagan). இயக்குநர் பிரேம் குமார் (Prem Kumar) இயக்கத்தில் வெளியான இப்படமானது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி, சர்தார் 2 (Sardar 2) மற்றும் வா வாத்தியார் (Vaa Vaathiyaar) போன்ற திரைப்படங்களில்  நடித்து வந்தார். தற்போது இந்த இரு திரைப்படங்களின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக புதிய படத்தில் இணைந்துள்ளார். தமிழில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான டாணாக்காரன் என்ற திரைப்படத்தை இயக்கி, பிரபலமான இயக்குநர் தமிழ் (Tamizh). இவர் சினிமாவில் முக்கிய நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்நிலையில், இவர் நடிகர் கார்த்தியின் புது படத்தை இயக்கவுள்ளார்.

கார்த்தி29 என படம் அறிவிக்கப்பட்ட நிலையில், படக்குழு இப்படத்திற்கு மார்ஷல் (Marshal) என டைட்டில் வைத்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜைகள் மற்றும் டைட்டில் ரிலீஸ் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மார்ஷல் படக்குழு வெளியிட்ட ஷூட்டிங் பூஜை புகைப்படங்கள் :

கார்த்தியின் மார்ஷல் திரைப்படம் :

நடிகர் கார்த்தியின் 29வது திரைப்படமாக உருவாகிவருவது இந்த மார்ஷல். இப்படத்தின் அறிவிப்புகள் கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்திலே வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்படமானது ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் இருந்து வந்த நிலையில், கடந்த 2025, ஜூலை 10ம் தேதியில் இப்படத்தின் ஷூட்டிங் பூஜை சென்னையின் நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க : சிவகார்த்திகேயன் படத்துடன் நேரடி மோதல் – விஜய் ஆண்டனி சம்பவம்!

இந்த பூஜையில் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் ஆரம்பமான நிலையில், படத்தின் ஷூட்டிங் ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கார்த்தியின் இந்த படத்தை ட்ரீம்ஸ் வாரியர் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் நிலையில், சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார்.

இந்த மார்ஷல் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க : தனுஷ் – விக்னேஷ் ராஜா கூட்டணி குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ராமேஸ்வரத்தில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மேலும் இப்படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தைப் படக்குழு வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.