டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் சாண்ட்ராவை கடுப்பேத்தும் கம்ருதின் மற்றும் பார்வதி – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃபினாலேக்கான டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. இந்த டாஸ்குகளில் வெற்றிபெறும் நபர் நேரடியாக ஃபினாலேக்கு செல்லும் வாய்ப்பை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் சாண்ட்ராவை கடுப்பேத்தும் கம்ருதின் மற்றும் பார்வதி - வைரலாகும் வீடியோ

பிக்பாஸ்

Published: 

02 Jan 2026 10:56 AM

 IST

தமிழ் சின்னத்திரையில் தொடர்ந்து மக்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ் சீசன் 9. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து பல நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்றாலும் பார்வையாளர்கள் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியை பார்க்க தவறியத்தில்லை என்றே சொல்ல வேண்டு. அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியைப் பார்வையாளர்கள் திட்டிக்கொண்டே பார்த்து வருகிறார்கள் என்பதே உண்மை. இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் மொத்தம் வைல்கார்ட் போட்டியாளர்களுடன் இணைந்து 24 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார். இதுவரை 12 வாரங்கள் முடிவடைந்து தற்போது 13-வது வாரம் சென்று கொண்டிருக்கும் நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது.

இந்த டாஸ்கில் இதுவரை போட்டியாளர்கள் எத்தனை மதிப்பெண்கள் பெற்றார்கள் என்பதை கணக்கிடும் போது அதில் சபரி முதலிடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து அரோரா மற்றும் சாண்ட்ரா இருவரும் ஒரே மதிப்பெண் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில் அடுத்தடுத்த மதிப்பெண்களைப் பெற்ற போட்டியாளர்கள் வரிசையாக இடம் பிடித்துள்ளனர். இதில் கடைசி இடத்தில் குறைவான மதிப்பெண்ணைப் பெற்ற வினோத் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாண்ட்ராவை ஸ்கேம்ட்ரா என்று சொல்லி கடுப்பேத்தும் கம்ருதின்:

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இன்று 89-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போதே டாஸ்கில் கம்ருதின் சாண்ட்ராவை ஸ்கேம்ட்ரா என்று கூறியதுடன் அவரை கடுப்பேத்தும் விதமாக கம்ருதின் மற்றும் பார்வதி பேசுகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… முத்து பட வீடியோ உடன் புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்… வைரலாகும் பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… யோகி பாபுவின் 300-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

Related Stories
பிக்பாஸில் பார்வதி – கம்ருதினால் எரிச்சலான போட்டியாளர்கள்… தகாத வார்த்தைகளால் சண்டை!
D 54 படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகளை தொடங்கிய படக்குழு – வைரலாகும் போட்டோ!
27 தியேட்டர்தான் கொடுத்தாங்க.. தமிழ் சினிமா சாகும்.. கொதித்து பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!
சீரியல் ஆக்டர் டூ கோலிவுட் நாயகன்… இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரிகிறதா? இவர் 3 ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார்!
New Year: ஃபர்ஸ்ட் பார்ட் சூப்பர் ஹிட்.. 2026 கோடைக்காலத்தில் ரிலீசிற்கு காத்திருக்கும் பார்ட் 2 படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ!
Mari Selvaraj: அந்த படம் பார்த்தபோது என்னை உறையவைத்தது- மனம் திறந்த மாரி செல்வராஜ்!
பான் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கடைசி நாள்.. யாருக்கு இது கட்டாயமில்லை?
துரந்தர் 2 இன்னும் பயங்கரமாக இருக்கும்.... - ராம் கோபால் வர்மா சர்ப்ரைஸ் தகவல்
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பில் சந்தேகம் - உத்தப்பாவின் பேச்சால் சர்ச்சை
தோனியின் காரில் இருந்த சிகரெட் பாக்ஸ் - வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி