ஏன் எப்போதுமே இப்படி இருக்கீங்க? மேடையில் கேள்விகேட்ட திரிஷா.. கமலின் ரியாக்ஷன் என்னனு பாருங்க!

Trisha Asks Kamal Haasan a Hilarious Question : தமிழ் சினிமாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருபவர் கமல்ஹாசன். இவர் சமீபத்தில் சைமா விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அதில் திரிஷா மேடையில் பேசியபோது, கமல்ஹாசன் குறித்து பேசிய நிலையில், அதற்கு கமல்ஹாசம்ன கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏன் எப்போதுமே இப்படி இருக்கீங்க? மேடையில் கேள்விகேட்ட திரிஷா.. கமலின் ரியாக்ஷன் என்னனு பாருங்க!

திரிஷா கிருஷ்ணன் மற்றும் கமல்ஹாசன்

Published: 

09 Sep 2025 19:02 PM

 IST

நடிகர் கமல்ஹாசன் (kamal haasan) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தை பிரபல இயக்குநரான மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தின் கதையை மணிரத்னத்துடன் இணைந்து, கமல்ஹாசனும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தக் லைஃப் படமானது கடந்த, 2025 ஜூன் 5 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இதில், கமல்ஹாசனுடன் முக்கிய வேடத்தில் சிலம்பரசனும் (Silambarasan) நடித்திருந்தார். மேலும் நடிகைகள் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan), அபிராமி மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது இவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இப்படத்தில் சுமார் பல வருடங்களுக்கு பின் கமல் மற்றும் சிலம்பரசனுடன், திரிஷா இணைந்து நடித்திருந்தார்.

மேலும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரிஷா, அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்த, கமல்ஹாசனிடம் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அதற்கு கமல்ஹாசன் கொடுத்த ரியாக்ஷன் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : ரீ ரிலீஸாகும் விஜய் – சூர்யாவின் ஃப்ரண்ட்ஸ் படம்… உற்சாகத்தில் ரசிகர்கள்

கமல்ஹாசன் குறித்து திரிஷா பேசிய விஷயம்

அந்த நிகழ்ச்சியில், திரிஷா கிருஷ்ணன் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, அவரிடம் கமல்ஹாசனின் புகைப்படம் காட்டப்பட்டது. அதை பார்த்து, எதிரில் இருந்த கமல்ஹாசனிடம் திரிஷா கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அப்போது திரிஷா, கமலிடம் “கமல் சார் ஏன் எப்போதுமே இப்படி இருக்கீங்க?, நீங்க எப்பவும் எப்படி இவ்வளவு ஹாட்டா இருக்கீங்க, ரொம்ப அழகா இருக்கீங்க?” என்று கேள்வி கேட்டிருந்தார்.

இதையும் படிங்க : எல்லா பெருமையும் லோகேஷ் கனகராஜைதான் சேரும் – நெகிழ்ந்து பேசிய டான்ஸ் மாஸ்டர் சாண்டி

அதற்கு கமல்ஹாசன் வெட்கப்பட்டபடியே சிரித்திருந்தார். மேலும் அருகில் இருந்த சிவகார்த்திகேயனையும் பார்த்த வெட்கத்துடன், கமல்ஹாசன் சிரித்திருந்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் பற்றி திரிஷா கேள்வி கேட்ட வீடியோ :

கமல்ஹாசன் மற்றும் திரிஷா இணைந்து நடித்த படங்கள் :

நடிகை திரிஷா கிருஷ்ணன், கமல்ஹாசனுடன் கிட்டத்தட்ட 3 படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான மன்மதன் அம்பு, தூங்காவனம் மற்றும் இந்த 2025ம் ஆண்டு வெளியான தக் லைஃப் என மூன்று படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இதில் மன்மதன் அம்பு மற்றும் தக் லைஃப் படங்கள் ஓரளவு ரசிகர்களைக் கவர்ந்தது, ஆனால் இந்த தக் லைஃப் படமானது அந்த அளவிற்கு வரவேற்புகளை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.