Thug Life : 10 நாட்கள் முடிவில் கமல்ஹாசன் மற்றும் சிம்புவின் தக் லைஃப் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
Thug Life Movie 10th Day Collection : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கோலிவுட் சினிமாவில் இறுதியாக வெளியான படம் தக் லைஃப். இப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் முன்னணி நடிகர்களாக நடித்திருந்தனர். இப்படமானது வெளியாகி 10 நாட்களை கடந்த நிலையில், மொத்தமாக எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்துப் பார்க்கலாம்.

நடிகர் கமல்ஹாசனின் (Kamal Haasan) முன்னணி நடிப்பில் மற்றும் எழுத்தில் வெளியான படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தில் முக்கிய ஹீரோவாக நடிகர் கமல்ஹாசன் நடிக்க, அவருடன் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நடிகர் சிலம்பரசன் (Silambarasan) நடித்திருந்தார். இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் மற்றும் கேங்ஸ்டர் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த தக் லைஃப் படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் இப்படத்திற்கு முன் வரலாற்றுக் காவியமான பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) பாகம் 1 மற்றும் 2 வெளியாகியிருந்தது. இந்த படமானது எதிர்பார்த்ததை விடவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்றே கூறலாம். ஆனால் அதற்கு அப்படியே மாறாக இந்த தக் லைஃப் படத்தின் ரிசல்ட் அமைந்துள்ளது.
கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் இந்த தக் லைஃப் படமானது திரையரங்குகளில் வெளியானது. இந்த படமானது வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. மேலும் படத்தின் கதைக்களம் சரியாக இல்லை என்று ரசிகர்கள் குறைகளைக் கூறினார்கள். இந்த படமானது வெளியாகி இதுவரை 10 நாட்களைக் கடந்த நிலையில், எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?




இந்த படமானது மொத்தமாக சுமார் ரூ. 50 கோடியை வசூல் செய்துள்ளதாம் . இந்த தகவலை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தளத்தில் பகிரப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் வரவேற்பு திரையரங்குகளில் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
The Rain of Love & Melody Has Begun! 😍#MuththaMazhai #MudduVaana Video Song From #ThugLife is Out Now 🎤🎶♥
A #ManiRatnam Film
An @arrahman Musical🎙 @Chinmayi @talktodhee
✍🏻 @bagapath @IananthaSriram@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran… pic.twitter.com/WleL2LFP3S— Saregama South (@saregamasouth) June 14, 2025
தக் லைஃப் படத்தின் பட்ஜெட் :
கமல் மற்றும் சிலம்பரசனின் இந்த தக் லைஃப் படமானது கேங்ஸ்டர் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் சிலம்பரசனின் நடிப்பு மிகவும் அருமையாகவே இருந்தது. ஆனால் கமல்ஹாசனை ஒப்பிடும்போது சிலம்பரசனின் காட்சிகள் இப்படத்தில் பெரிதும் முக்கியத்துவம் இல்லை என்பது அவரது ரசிகர்களின் குறையாக இருந்தது.
இந்த தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. இப்படமானது மொத்தம் சுமார் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை மொத்தம் வெறும் ரூ 50 கோடி மட்டுமே படம் வசூல் செய்துள்ளது.
நெட்பிலிக்ஸில் விரைவில் வெளியீட்டு :
இந்த தக் லைஃப் படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமானது பெற்றுள்ளது. இந்த படத்தை சுமார் ரூ 70 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனமானது வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் ஓடிடியில் தக் லைஃப் படமானது 8 வாரத்திற்கு பிறகுதான் வெளியாகும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தக் லைஃப் படத்திற்கு போதுமான வரவேற்புகள் இல்லாத நிலையில், 4 வாரத்திற்குள் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.