STR49 Movie: STR49 படத்தின் புரோமோ ரிலீஸ் ஒத்திவைப்பா? தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!
STR49 Promo Delayed: தமிழ் சினிமாவில் தனது சிறுவயது முதலே ரசிகர்கள் மனதில் ஆதிக்கம் செலுத்திவருபவர்தான் சிலம்பரசன். இவர் தக் லைஃப் படத்தை தொடர்ந்து, வெற்றிமாறனின் இயக்கத்தில் STR49 படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டநிலையில், சமீபத்தில் தயாரிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

சிலம்பரசனின் STR49 படம்
நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்க, கமல்ஹாசன் (Kamal Haasan) கதை எழுதியிருந்தார். மேலும் இப்படத்தில் முன்னணி ஹீரோவாகவும் கமல்ஹாசன் நடித்திருந்தார். இந்த தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுக்கு இணையான வேடத்தில் சிலம்பரசன் நடித்திருந்தார். ஆனாலும் இந்த படமானது மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை அடுத்ததாக சிலம்பரசன் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் நடிக்கவிருந்த நிலையில், சில காரணங்களால் அப்படமானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில், சிலம்பரசன் STR49 என்ற படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ, இன்று 2025 அக்டோபர் 4ம் தேதியில் வெளியாகவிருந்த நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு (Kalaipuli S. Thanu) வெளியிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இட்லி கடைக்கு கிடைக்கும் வரவேற்பு… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்!
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு STR49 படம் குறித்து அறிவிப்பு :
சிம்புவின் ரசிகர்களின் அன்பு
வேண்டுகோளுக்கிணங்க
STR & வெற்றிமாறன்
படத்தின் முன்னோட்டம் திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது ரசிகர்களின் இத்தனை நாள் பொறுமைக்கு ஈடுசெய்யும் நிகழ்வாக அமையும். ஆகையால் சென்சார் பணிகள் நிறைவுற்று, விரைவில் உங்கள் கண்முன்னே…— Kalaippuli S Thanu (@theVcreations) October 3, 2025
இந்த பதிவில், STR49 பட தயாரிப்பாளர், சிலம்பரசனின் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப STR49 படத்தின் ப்ரோமோ வீடியோ, சமூக ஊடகங்களிலும் மற்றும் திரையரங்குகளிலும் ஒன்றாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதன் காரணமாக சென்சார் பணிகள் நடைபெற்றுவருவதால், விரைவில் இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகும் என கூறியுள்ளது.
இதையும் படிங்க : அஜித்குமாருக்கு இப்படி ஒரு பிரச்னையா? – அவரே பகிர்ந்த தகவல்!
இந்நிலையில், இந்த தகவலானது தற்போது சிலம்பரசனின் STR49 படத்தின் ப்ரோமோ, இன்று 2025 அக்டோபர் 4ம் தேதியில் வெளியாகாதா? என சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், அது உறுதியாகியுள்ளது. சிலம்பரசனின் STR49 ரசிகர்கள் இந்த அறிவிப்பிற்காகதான் காத்திருந்த நிலையில், மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுவதாக தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
சிலம்பரசனின் STR49 பட நடிகை யார்?
நடிகர் சிலம்பரசனின் இந்த STR49 படத்திற்கு நடிகை யார் என ரசிகர்கள் கட்டுவருகின்றனர். இந்நிலையில் இணையத்தில் வைரலாகும் தகவலின்படி, இந்த படத்தில் நடிகை சாய் பல்லவியை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.