மெர்சல் படத்தில் நித்யாமேனன் கதாப்பாத்திரம் எனக்குதான் வந்தது – ஜோதிகா சொன்ன விசயம்!

Actress Jyothika: 90ஸ் கிட்ஸ்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை ஜோதிகா. இவர் திருமணத்திற்கு பிறகு சிறிது ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஜோதிகா படங்களில் நடிப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

மெர்சல் படத்தில் நித்யாமேனன் கதாப்பாத்திரம் எனக்குதான் வந்தது - ஜோதிகா சொன்ன விசயம்!

ஜோதிகா

Published: 

22 Aug 2025 18:12 PM

இயக்குநர் அட்லி குமார் எழுதி இயக்கிய படம் மெர்சல். இந்தப் படத்தில் நடிகர் விஜய் (Actor Vijay) நாயகனாக நடித்து இருந்தார். இதில் அப்பா மற்றும் இரண்டு மகன்கள் என 3 வேடங்களில் நடிகர் விஜய் நடித்து இருந்தார். இந்தப் படம் கடந்த 18-ம் தேதி அக்டோபர் மாதம் 2017-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ரூத் பிரபு, வடிவேலு, சத்யராஜ், ஹரீஷ் பெராடி, கோவை சரளா. சத்யன், சங்கிலி முருகன், காளி வெங்கட், எம்.காமராஜ், பரத் ராஜ், யோகி பாபு, ராஜேந்திரன், தேவதர்ஷினி, சுரேகா வாணி, பிரியா, மிஷா கோஷல், ஷிவானி முரளி, செந்தி குமாரி,
சீனி அம்மா, அப்துல் லீ, தவசி, சாய் தீனா, பசங்க சிவகுமார், பாண்டியன், பரிதபங்கல் கோபி, பரிதாபங்கள் சுதாகர், பூ ராமு என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இருந்த நிலையில் படம் ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தற்போது வேட்டி கட்டும் இளைஞர்கள் ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு ரீல்ஸ் செய்வது குறிப்பிடத்தக்கது.

மெர்சல் படம் குறித்து நடிகை ஜோதிகா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஜோதிகா தற்போது நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஜோதிகாவிடம் மெர்சல் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகை ஜோதிகா மெர்சல் படத்தில் நித்யா மேனனின் கதாப்பாத்திரம் எனக்குதான் வந்தது. கதையைக் கேட்டேன் எனக்கு கதையில் சில விசயங்களில் பெரிய அளவில் விருப்பம் இல்லாத காரணத்தால் அந்த கதாப்பாத்திரத்தில் நான் நடிக்கவில்லை என்று நடிகை ஜோதிகா வெளிப்படையாக பேசியுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

Also Read… பரியேறும் பெருமாள் படத்தை மிஸ்பன்னத நினைத்து வருத்தப்பட்டேன் – நடிகை அனுபமா பரமேசுவரன்

நடிகை ஜோதிகாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டர் அந்த பாலிவுட் நடிகருக்குதான் முதலில் சொன்னேன் – ஏ.ஆர்.முருகதாஸ்