பராசக்தியா? வா வாத்தியாரா? சைலண்டாக பொங்கல் ரேஸில் வெற்றிபெற்ற ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில்..!
Jiiva Comeback Movie: தமிழ் சினிமாவில் இந்த 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையானது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நிலையில், ஜன நாயகன் படம் வெளியாகாத காரணத்தால் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. அதில் சைலண்டாக ப்ரோமோஷன் இல்லாமல் நுழைந்த ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம் சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றுவருகிறது.

தலைவர் தம்பி தலைமையில் படம்
தென்னிந்திய சினிமாவில் புத்தாண்டு தொடங்கினாலே தொடர்ந்து பிரம்மாண்ட நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகுவது வழக்கம். அதுபோல் தமிழ் சினிமாவில் பொங்கல் திருவிழாவில் (Pongal) உச்ச நடிகர்களின் படங்கள் வெளியாகும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த விதத்தில் இந்த 2026ம் ஆண்டு தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஜனவரி 9ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின் இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், சென்னை ஹை கோர்ட்டில் வழக்கு நடைபெற்றுவந்தது. இன்னும் இப்படமானது ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) பராசக்தி (Parasakthi) திரைப்படமானது 2026 ஜனவரி 10ம் தேதியில் பெரும் எதிர்பார்துக்களுடன் வெளியிடப்பட்டிருந்தது. அந்த வகையில் இந்த படமும் திரையரங்குகளில் மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றுவந்தது.
இதன் காரணமாக ஜனவரி இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த படங்கள், 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 மற்றும் 15ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் கார்த்தியின் ?(Karthi) வா வாத்தியார் (Vaa Vaathiyaar) மற்றும் ஜீவாவின் (Jiiva) தலைவர் தம்பி தலைமையில் (Thalaivar Thampi Thalamaiyil) போன்ற படங்கள் வெளியாகியிருந்தது. இதில் கார்த்தியின் வா வாத்தியார் ரசிகர்களிடையே வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் சூப்பர் ஹிட் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: அந்த பெரிய நட்சத்திர நடிகர் என்னை தொட முயன்றார்.. உடனடியாக அவரை அறைந்தேன்- பூஜா ஹெக்டே பரபரப்பு பேட்டி!
திரையரங்கில் எதிர்பாராத வரவேற்பை பெற்றுவரும் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம்:
நடிகர் ஜீவாவின் நடிப்பில் கடந்த 2026 ஜனவரி 15ம் தேதியில் பொங்கல் பண்டிகையன்று வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ஜீவா பஞ்சாயத்து தலைவர் வேடத்தில் நடித்திருந்த நிலையில், அரசியல் நிறைந்த காமெடி திரைப்படமாக இது வெளியாகியிருந்தது. இந்த படத்ததை மலையாள இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கியிருந்தார். இந்த படமானது முதலில் 2026 ஜனவரி 30ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜன நாயகன் பட ரிலீஸ் தள்ளிப்போனதால் ஜனவரி 15ல் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் ரிலீசானது திடீரென முடிவான நிலையில், பெரிதாக எந்தவித ப்ரோமோஷன் மற்றும் எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இப்படம் வெளியிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ஜனநாயகனுக்கு நடந்தது எந்தப் படத்துக்கும் நடக்கக் கூடாது – சுதா கொங்கரா பேச்சு!
இந்நிலையில் இப்படத்திற்கு வரவேற்பும் கிடைக்காது என நிலையில், பராசக்தி மற்றும் வா வாத்தியார் படத்திற்கும் கிடையாக வரவேற்பு இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது. பல வருடங்களுக்கு பின் ஜீவாவிற்கு இரு ஒரு கம்பேக் படமாகவே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது வெளியாகி 5 நாட்களை கடந்த நிலையில், இதுவரை வசூலில் சுமார் ரூ 16 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2026 பொங்கல் பராசக்தியா? வா வாத்தியாரா? என்ற நிலையில், சைலண்டாக வந்த தலைவர் தம்பி தலைமையில் படமானது தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.