ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் பட ஓடிடி- சாட்டிலைட் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்?
TTT Movie OTT & Satellite Rights: ஜீவா நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் வெளியான படம்தான் தலைவர் தம்பி தலைமையில். இப்படமானது திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தில் ஓடிடி ரிலீஸ் மற்றும் சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளது.

ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில்
நடிகர் ஜீவா (Jiiva) தமிழ் சினிமாவில் தொடர்ந்து லீட் நடிகராக திரைப்படங்களில் நடித்துவருகிறார். மேலும் தெலுங்கிலும் சில படங்களில் முக்கிய வேடங்களில் இவர் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான படங்கள் பெரிதாக வரவேற்கப்படவில்லை. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம்தான் “தலைவர் தம்பி தலைமையில்” (Thalaivar Thambi Thalaimaiyil). இந்த படத்தை ஃபலிமி (Falimy) இயக்கிய மலையாள இயக்குநர் நிதிஸ் சத்யதேவ் (Nithish Sahadev) இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகர்கள் தம்பி ராமையா, இளவரசு, ப்ரதானா நாதன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருந்த நிலையில், எதிர்பாராத வரவேற்பை பெற்றிருந்தது.
இப்படத்தின் ரிலீசிற்கு சில நாட்களுக்கு முன் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமானது வெளியாகியிருந்தது. அந்த படத்தை விடவும் இப்படத்திற்கு மக்களிடையே சிறப்பான வரவேற்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் மற்றும் சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனங்கள் வங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதை அது உறுதிசெய்கிறது – அஜித் குமார் பேச்சு!
தலைவர் தம்பி தலைமையில் படத்தின் சாட்டிலைட்- ஓடிடி ரிலீஸ் உரிமை :
ஜீவாவின் இப்படமானது முழுக்க அரசியல் காமெடி கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இப்படத்தில் ஜீவா பஞ்சாயத்து தலைவராக நடித்திருந்த நிலையில், ரசிகரிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இந்த படமானது ஆரம்பத்தில் ஜனவரி 30ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்ட நிலையில், ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால் உடனடியாக ஜனவரி 15ம் தேதியில் வெளியாகுவதாக படக்குழு அறிவித்திருந்தது. அந்த விதத்தில் இப்படத்திற்கு திரையரங்குகளில் சிறப்பான வரவேற்புகள் கிடைத்திருந்தது.
இதையும் படிங்க: நான் பட இயக்குநருடன் கைகோர்த்த அதர்வா.. வெளியானது புது படத்தின் டைட்டில் டீசர்!
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனங்கள் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் TTT படத்தின் சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை ஜீ தமிழ் நிறுவனமும், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் வங்கியுள்ளதாம். மேலும் இப்படம் ஓடிடியில் வரும் பிப்ரவரி 12ல் வெளியாகவுள்ளது.
TTT படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி ரிலீஸ் உரிமை பெற்ற நிறுவனங்கள் குறித்த பதிவு:
#TTT — Satellite & Digital Rights Sold Out
Netflix — Z Tamil ✅ pic.twitter.com/pIzXPySUHi
— Movie Tamil (@_MovieTamil) February 7, 2026
இந்நிலையில் இப்படமானது உலகளாவிய வசூலில் சுமார் ரூ 37 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாம். வெறும் ரூ 8 முதல் 10 கோடியில் பொருட்செலவில் உருவான இப்படம் ரூ 37 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.