Jiiva46 : ‘பிளாக்’ பட இயக்குநருடன் மீண்டும் கைகோர்க்கும் ஜீவா!

JIiva46 Movie Shooting Pooja : நடிகர் ஜீவாவின் முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் இவர் கடந்த 2024ம் ஆண்டு வெளியான பிளாக் பட இயக்குநருடன், மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியிருக்கும் நிலையில், நடிகர் ஜீவா எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

Jiiva46 : பிளாக் பட இயக்குநருடன் மீண்டும் கைகோர்க்கும் ஜீவா!

ஜீவா46 படத்தின் பூஜை

Published: 

15 Jul 2025 16:21 PM

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் ஜீவா (Jiiva). இவர் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி சௌத்ரியின் (R.P. Chowdhury) மகன் ஆவார். இவர் தனது தந்தை தயாரித்த படங்கள் மூலமாகவே சினிமாவில் நடிகராக நுழைந்தார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் அகத்தியா (Aghathiyaa). இயக்குநர் பா. விஜய் (Pa. vijay) இயக்கத்தில் வெளியான இப்படமானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்த படமானது கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தை அடுத்து தற்போது நடிகர் ஜீவா புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.  ஜீவாவின் நடிப்பில் ஏற்கனவே வெளியான பிளாக் (Black) என்ற படத்தை இயக்கிய இயக்குநர் கே.ஜி. பாலசுப்ரமணிதான் (KG Balasubramani) இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

இந்த கூட்டணி ஜீவாவின் 46வது படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தைத் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியிருக்கும் நிலையில், விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  இது தொடர்பாக  நடிகர் ஜீவா நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : நித்யாமேனன் மீது கோபப்பட்ட விஜய் சேதுபதி மனைவி.. ஏன் தெரியுமா?

நடிகர் ஜீவா வெளியிட்ட ஜீவா46 பட பதிவு :

ஜீவாவின் 46வது திரைப்படம்

நடிகர் ஜீவாவின் இந்த 46வது திரைப்படத்தை இயக்குநர் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கும் நிலையில், தயாரிப்பாளர் கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படமானது தற்காலிகமாக ஜீவா46 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் பப்லு நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று 2025, ஜூலை 14ம் தேதியில் நடந்த நிலையில், இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்துகொண்டார். இந்த படமானது பிளாக் படத்தைப் போல, மர்ம கதைக்களத்துடன் உருவாக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : துல்கர் சல்மானின் ‘காந்தா’ ஷூட்டிங் நிறைவு.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

ஜீவாவின் 46வது படத்தின் ஷூட்டிங் ஆரம்பம் :

நடிகர் ஜீவாவின் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025 ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர் யார் என்பதைப் பற்றிய அறிவிப்புக்கள் வெளியாகும் என் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் ஜீவா வெளியிட்ட பதிவு மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.