காதலர் தினத்தில் மிருணாள் தாக்கூரை திருமணம் செய்யும் தனுஷ்? இணையத்தில் வைரலாகும் தகவல்
Dhanush Marriage Rumors : தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். அதன்படி நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தனுஷ் - மிருணாள் தாக்கூர்
தமிழ் சினிமாவில் பழம்பெரும் இயக்குநராக இருப்பவர் இயக்குநர் கஸ்தூரி ராஜா. இவரது இயக்கத்தில் முன்னதாக தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இவரது வாரிசுகளாக தமிழ் சினிமாவில் இரண்டு மகன்களும் வருகைத் தந்தனர். அதன்படி கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் செல்வராகவன் இயக்குநராகவும் இளைய மகன் தனுஷ் நடிகராகவும் தமிழ் சினிமாவிற்கு ஒரே நேரத்தில் எண்ட்ரி கொடுத்தனர். மேலும், இவர்கள் இருவருமே அவர்களின் துறையில் ரசிகர்களிடையே தற்போது கொடிக்கட்டிப் பறக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்க வந்த போது அவரது உடல் அமைப்பைப் பார்த்தும் அழகை வைத்தும் பலரும் இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா என்று கிண்டலடித்து இருந்த நிலையில் தற்போது தனது நடிப்புத் திறமையால் ஹாலிவுட் வரை கலக்கி வரும் தனுஷைப் பார்த்து வாயடைத்துப் போயுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் அடுத்தடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இந்த நிலையில் இந்த ஆண்டும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்த ஆண்டும் நடிகர் தனுஷ் நடிப்பில் படங்கள் வரிசையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
காதலர் தினத்தில் மிருணாள் தாக்கூரை திருமணம் செய்யும் தனுஷ்?
இந்த நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் முன்னதாக திருமணம் நடைப்பெற்று இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்து பின்பு விவாகரத்தும் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிகை மிருணாள் தாக்கூர் உடன் காதலில் இருப்பதாக கடந்த ஆண்டு முதல் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்தது. ஆனால் இதுகுறித்து அவர்கள் இருவருமே வெளிப்படையாக இதுவரை பேசவில்லை. இப்படி இருக்கும் நிலையில் பொது நிகழ்வுகள் அல்லது பட விழாக்காளில் தொடர்ந்து இவருவரும் ஒன்றாகக் காணப்பட்டு வந்த நிலையில் இவர்கள் இருவரும் வருகின்ற பிப்ரவரி மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு காதலர் தினத்தன்று திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பரவி வருகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… தனுஷின் 54 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெளியானது சூப்பர் அப்டேட்
நடிகை மிருணாள் தாக்கூரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
Also Read… பிக்பாஸில் பொங்கலோ பொங்கல்… கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள்